Jun 4, 2013

Dinamani News

பான்மசாலா, குட்கா விற்பனையைத் தடை செய்வதற்கான சோதனையை செவ்வாய்க்கிழமை முதல் தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பான்மசாலா, குட்கா விற்பனையைத் தடை செய்வதற்கான சோதனையை செவ்வாய்க்கிழமை முதல் தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பான்மசாலா குட்கா தடைச் சட்டம் தொடர்பாக, உணவுப் பாதுகாப்புத் துறையின் மாவட்ட அளவிலான குழுவின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட அதிகாரி சுகுணா, சுகாதாரத் துறை துணை இயக்குநர் செந்தில்குமார், மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் பிரியாராஜ் மற்றும் வணிகவரி, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்கள் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழகத்தில் பான்மசாலா, குட்கா விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, அதற்கான தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்த அரசாணையைச் செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதன்படி, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாவட்ட முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் சோதனையைத் தீவிரப்படுத்துவது எனவும், பான்மசாலா, குட்கா போன்றவற்றை பறிமுதல் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் மாநகராட்சி, காவல், வணிகவரி உள்ளிட்ட துறையினரையும் சோதனையில் இணைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
உத்தங்குடி, ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி சுகுணா தலைமையிலான அலுவலர்கள் திங்கள்கிழமை மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டு, சில கடைகளில் விற்பனைக்கு இருந்த பான்மசாலா, குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்

No comments:

Post a Comment