Jun 8, 2013

சேலத்தில் உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில், 15 ஆயிரம் மதிப்புள்ள போதை பாக்கு பொட்டலங்கள் பறிமுதல்


சேலம், ஜூன் 8:
ஆயிரம் மதிப்புள்ள குட்கா, பான், புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் அடங்கிய 2500 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
குட்கா, பான் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து, சேலம் சின்னக்கடை வீதி, முதல் அக்ரஹாரம், இரண்டாவது அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் உணவுப்பாதுகாப்பு திட்ட மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில் 50 கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த கடைகளில் இருந்து மொத்தம் 15 ஆயிரம் மதிப்புள்ள 2500 போதை பாக்கு பொட்டலங்கள், புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
போதை பொருட்களை விற்ற 50 கடைகளுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அந்த நோட்டீஸில், உணவு பாதுகாப்பு சட்டம்&2006, அரசாணை எண் 132ன் கீழ், தமிழக அரசு போதை பாக்கு, புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கு கடந்த மாதம் 23ம் தேதி முதல் தடை விதித்துள்ளது.
இவ்வகை பொருட்களை, ஏற்கனவே வாங்கி இருப்பு வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், விநியோகஸ்தர்கள் இம்மாதம் 22ம் தேதிக்கு பின்னர் விற்பனை செய்யக்கூடாது. இருப்பு வைத்திருக்கவும் கூடாது. மீறினால், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment