May 19, 2013

தனியார் நிறுவனங்களின் "கேன்' குடிநீர் தரமானதா?

தனியார் நிறுவனங்களின் "கேன்' குடிநீர் தரமானதா?
சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டங்களில்,முறையான அங்கீகாரம் இல்லாமல்இயங்கி வரும் தனியார் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் மீது, தேசியபசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்பேரில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கு தனியார் குடிநீர் தயாரிப்பாளர்கள், தங்கள் நிறுவனங்களை மூடி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குடிநீர் வாரியத்தின் சார்பில், நகரின் பல பகுதிகளில் சீரான,தரமான குடிநீர் கிடைக்காததால் தான், தாங்கள் கேன்குடிநீருக்கு மாறி விட்டதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குடிநீர் வினியோகத்தில் பிரச்னை

சென்னையில், தேனாம்பேட்டை மண்டலம், அடையாறு மண்டலம் உள்ளிட்ட ஒரு சில மண்டலங்களில் மட்டுமே குடிநீர் வாரியத்தின் குடிநீர் குடிக்க தகுந்ததாக இருக்கிறது. மற்ற மண்டலங்களில், பல்வேறு பிரச்னைகளுடன்தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.குறிப்பா
க, தண்டையார்பேட்டை, ராயபுரம் போன்றமண்டலங்களில், 50 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்டகுடிநீர் குழாய்கள், நீரழுத்த பிரச்னை போன்ற பல்வேறு பிரச்னைகளால், குடிநீர் வாரியத்தின் குடிநீர் குடிப்பதற்குதகுதியில்லாததாக மாறி வருகிறது.

அதற்கு மாற்றாக அந்த பகுதியினர், புறநகர் பகுதிகளில் இருந்து தனியார் லாரிகளால் கொண்டு வரப்படும்நிலத்தடி நீரை ஒரு குடம் 5 ரூபாய் வீதம்வாங்குகின்றனர்.

தென் சென்னையில், நிலைமை வேறு விதமாக இருக்கிறது. தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்,அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குடிநீர் வினியோகிக் கப்படுகிறது. பாலாற்று தண்ணீர் என,குறிப்பிடப்படும் அந்த குடிநீர் வாரத்திற்கு ஒரு முறைதான் வினியோகிக்கப்படுகிறது. அதுவும் பல நேரங்களில்சுகாதாரமில்லாததாக இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

கழிவுநீர் கலந்து... இதுகுறித்து, பெரம்பூர் பகுதிவாசி சீனிவாசன் என்பவர் கூறுகையில்,"" பெரம்பூர் ராகாவாச்சாரி தெரு மற்றும்சீனிவாச ராகவன் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீர் வாரியம் மூலம் வினியோகிக்கப்படும் தண்ணீர் மஞ்சள் நிறத்திலும் கழிவுநீர் கலந்து பயங்கர துர்நாற்றத்துடனும் வருகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் கேன்குடிநீரை குடிக்க பயன்படுத்துகின்றனர்,'' என்றார்.

அதேநேரம், ஏழுகிணறை சேர்ந்த மாணிக்கம் என்பவர் கூறுகையில்,""எங்கள் பகுதியில் பெரும்பாலோர்ஆழ்துளை குழாய் மூலம் எடுக்கப்படும் தண்ணீரை, சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தி குடிக்க பயன்படுத்துகிறோம்,'' என்றார்.

இதுகுறித்து குடிநீர் வாரிய உயர் அதிகாரி ஒருவர்கூறியதாவது:பாதுகாப்பான குடிநீர் வழங்க எல்லா நிலைகளிலும்கண்காணித்து, "குளோரின்' அளவை உறுதி செய்தேவினியோகிக்கிறோம். தரமான சிகிச்சை இருந்தும், நடுத்தர மக்கள், அரசு மருத்துவமனைகளை விட்டு, தனியார்மருத்துவமனைகளை நாடுவது போல், ஒரு சில ஆண்டுகளாக, தனியார் குடிநீர் கேன்கள் மீது மக்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர்.குழாய் பழுது, அழுத்த பிரச்னைகள் இருக்க தான்செய்கின்றன. எனினும் முன்பு இருந்ததுபோல், அவ்வளவாகஇல்லை.

புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில், மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப குடிநீர் தர முடியவில்லை. படிப்படியாக அதற்கான பணிகள் நடக்கும். சென்னைக் குடிநீரைநம்பி குடிக்கலாம்; காய்ச்சி குடியுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

அடிமையாகி விட்டோம்:குடிநீர் வாரிய குடிநீரின் தரம், அவ்வப்போது உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகளால் பரிசோதிக்கப்படுகிறது.

இதுகுறித்து அந்த துறை அதிகாரிகளிடம்கேட்டபோது,"நாங்
கள் பல இடங்களிலும்சோதனை செய்துள்ளோம். அதில், குளோரின் அளவை சரியாக இருந்தது. குளோரின் அளவு சரியாக இருந்தாலே நோய்கிருமிகள் எல்லாம் செத்து விடும். மாநகராட்சியும், சென்னை குடிநீரை அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறது'என்றனர்.

புழல், மாதவரம், கதிர்வேடு போன்றபகுதிகளில் நிலத்தடி நீரும் கெட்டு விட்டது.குடிநீர் வாரியத்தால்வினியோகிக்கப்படும் குடிநீரும் சுகாதாரமானதாகஇல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.மாதவரம்,ரெட்டை ஏரி பகுதியை சேர்ந்த சசிதரன் கூறுகையில்,""கேன்களில் கிடைக்கும் குடிநீரின்சுவைக்கு மக்கள் அடிமையாகி விட்டனர். நான்மாதம் 20 கேன்கள் வாங்குகிறேன். அதற்கு மாதம்500 ரூபாய் செலவாகிறது. நிலத்தடி நீர் முற்றிலுமாககெட்டு விட்டது. மாநகராட்சி மூலம் குழாய்களில்கிடைக்கும் தண்ணீர் சுகாதாரமானதாக இல்லை.நிலத்தடி நீர் அல்லது மாநகராட்சி வழங்கும் நீர்சுவையாக இல்லாவிட்டாலும், சுத்தமாக இருந்தால்தயக்கமின்றி பயன்படுத்தலாம்,'' என்றார்.

புழல், கதிர்வேடு பகுதியை சேர்ந்த சிவகாம சுந்தரி கூறுகையில்,"" சுகாதாரமற்ற நிலையில் கிடைக்கும் மாநகராட்சி தண்ணீரை குடிக்கும் குழந்தைகளின்உடல் நலம் பாதிக்கப்படுகிறது. மருத்துவ செலவு, அலைச்சல் என, மன உளைச்சல் ஏற்படுகிறது.அதனால்தான் நாங்கள் 20 முதல் 25 கேன்கள்வரை வாங்குகிறோம்,'' என்றார்.

அதேநேரம், கேன் குடிநீர் தயாரிப்பிலும் முறையான கண்காணிப்பு இல்லை என்ற, குற்றச்சாட்டுஎழுந்துள்ளது. அதன் பின்னணியில் தான், தற்போதுமாசு கட்டுப்பாட்டு வாரியம் சில நடவடிக்கைகளைஎடுத்து வருகிறது.

முறையாக நடக்கிறதா? கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில், சட்டப்படி கடைப்பிடிக்கப்பட வேண்டியவை குறித்து,உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர்கூறியதாவது:

குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒரு நுண் உயிரியியல் நிபுணர், வேதியியல் நிபுணர் ஆகியோர்உற்பத்தி நேரங்களில் கட்டாயம் பணியில்இருக்க வேண்டும். ஆனால், 90 சதவீதநிறுவனங்களில் இரண்டு நிபுணர்களும்இருப்பதில்லை.

சுத்திகரிப்பு பணி முடிந்து, குடிநீரை கேனில்அடைக்கும் பணியை இயந்திரங்கள் மூலமாகவே செய்ய வேண்டும். ஆனால், 90 சதவீத நிறுவனங்களில் வேலையாட்கள் மூலமாகவே குழாயில் இருந்து கேனில் குடிநீர் பிடிக்கப்படுகிறது.அதற்கு "சீல்' வைப்பதையும் பணியாளர்கள்தான் செய்கின்றனர்.

ஒவ்வொரு முறை சுத்திரிக்கப்பட்ட குடிநீர்வெளியேறும் போதும், வாகனத்தில் ஏற்றும்நிலைக்கு வந்த ஒரு கேனை மாதிரியாக (சாம்பிள்) எடுத்து வைக்க வேண்டும். இது எங்களின்திடீர் ஆய்வின் போது, பரிசோதனை செய்வதற்காக தான். ஆனால், அதையும் நிறுவனங்கள்செய்வதில்லை.

கேன்களை சுத்தப்படுத்துவது, சுத்திகரிக்கும் இயந்திரங்களில் வடிகட்டிகளை குறித்த காலத்திற்குள்மாற்றுவது, ஒவ்வொரு முறை உற்பத்தியின்போதும், ஆய்வகத்தில் குடிநீரின் தன்மையை பரிசோதித்து சான்று பதிவு செய்வது ஆகிய பணிகளை கட்டாயம் செய்ய வேண்டும். இதிலும், பலநிறுவனங்கள்ஆர்வம் காட்டுவதில்லை. பிரபலமான நிறுவனங்கள் மட்டுமே இந்த அனைத்துவிஷயங்களிலும், 100 சதவீதம் கவனமுடன்செயல்படுகின்றன.

ஒரு லிட்டர் குடிநீரில், அதிகபட்சம், 500 மில்லிகிராம், தாதுப் பொருட்கள் மற்றும் 20 அலகு நுண்துகள்கள் கலந்திருக்கலாம்.இந்த அளவுகள் அதிகமாக உள்ள குடிநீரை குடித்தால்,உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் கற்கள் உருவாவது, பற்களில் மஞ்சள் கறைபடிவது போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.

குடிநீர் வாரியத்தின் கடமை: சென்னையில் உள்ள, 25 தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில், அடுத்தடுத்து மாதிரிகள்எடுத்து சோதனை செய்தோம். அதில், ஆறு நிலையமாதிரிகளில், "பாதுகாப்பற்ற தண்ணீர்; குடிக்க பயன்படுத்த முடியாதவை' என, உறுதியானது.அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க,நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.மேலும், 17 நிலையங்களில், தரம் குறைவானதண்ணீர் என, கண்டறிந்தோம்.தரத்தை மேம்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். 25 நிறுவனங்களில், இரண்டுநிறுவனங்கள் மட்டுமே தரமான குடிநீரை தயாரித்தன. எனவே, பொதுமக்கள், குடிநீர் வாரியகுடிநீரை பயன்படுத்துவதே நல்லது.இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

பாதுகாப்பான, சுகாதாரமான, தரமான குடிநீரைதேர்ந்தெடுப்பது பொதுமக்களின் உரிமை. பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீரை அளிப்பதுசென்னை குடிநீர் வாரியத்தின் கடமை. அதேநேரம்,குடிநீரை விற்கும் தனியார் நிறுவனங்களும் தங்கள்பொறுப்பை உணர்ந்து பாதுகாப்பான குடிநீரைவிற்க வேண்டும் என்பதுதான், சென்னைவாசிகளின்கோரிக்கையாக இருக்கிறது.

விதி மீறல்: தமிழகம் முழுவதும் கேன் குடிநீர் கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. இதற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வாரியம் மூலம் தரமாகவும், சீராகவும் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்காததேமுக்கிய காரணம். அதையே மூலதனமாக கொண்டு,தனியார் கேன் குடிநீர் நிறுவனங்கள் புற்றீசல் போல் அதிகரித்து விட்டன. தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை அரசின்தலையை உருட்டாமல் இருக்க இந்த நிறுவனங்கள் உதவுவதால், அரசும் இதை பெரிதாக கண்டுகொள்ளாமல்விட்டுவிட்டது.கே
ன் குடிநீர் தயாரிக்கும் மொத்த நிறுவனங்களில் 90சதவீத நிறுவனங்கள் ஏதாவது ஒரு வகையில் அரசின்விதிமுறைகளை மீறியே இயங்கி வருவதாக புகார்எழுந்துள்ளது.

இந்த நிறுவனங்கள் சென்னை புறநகர் பகுதிகளிலும்,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் அதிகமாகஉள்ளன. குறிப்பாக ஏரிகள், குளங்கள் உள்ள பகுதி, நிலத்தடிநீர் நல்ல நிலையில் உள்ள பகுதிகளில் அதிகமாகஉள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்த வரையில் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், பரங்கிமலை ஒன்றியங்களில்குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகமாக செயல்பட்டுவருகின்றன.தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் புண்ணியத்தில்,இந்த தனியார் கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள்மீது இப்போது பொதுமக்கள் மற்றும் அரசின் கவனம்திரும்பியுள்ளது.

கேன்களை சந்தைப்படுத்துவது எப்படி? இருபது லிட்டர் கொள்ளளவுகொண்ட ஒரு குடிநீர் கேன் 100 ரூபாய்முதல் 200 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்பகிடைக்கிறது. இதை குடிநீர் தயாரிப்புநிறுவனங்களோ, விற்பனை ஏஜென்டுகளோ கொள்முதல் செய்கின்றனர்.ஏஜென்ட் கேன் கொடுத்தால், அதில்20 லிட்டர் குடிநீரை நிரப்பி தர, கேன் ஒன்றுக்கு5 ரூபாய் முதல் 9 ரூபாய் வரைநிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கின்றன.கேன், நிறுவனத்திற்கு சொந்தமானதாக இருந்தால், 12 ரூபாய் முதல் 17 ரூபாய் வரை ஏஜென்டுகள்கட்டணம் செலுத்துகின்றனர்.

இந்த குடிநீர் கேன் வாடிக்கையாளர்களுக்கு வந்துசேரும் போது, 25 ரூபாய் முதல் 45 ரூபாய் வரைவிற்கப்படுகிறது. கட்டணம் தவிர வாடிக்கையாளர்கள் ஒரு கேனுக்கு குறைந்தபட்சம் 100 ரூபாய்முன்பணம் செலுத்த வேண்டும்.

ஒரு சிறிய நிறுவனத்தில் கூட இன்றைக்குதினசரி 1,500 கேன்கள் குடிநீர் உற்பத்தியாகிறது.? இதன் மூலம் தினசரி கிடைக்கும் வருவாய் 7,000முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை.

நான்கு அல்லது ஐந்து பணியாளர்கள் மட்டுமேநிறுவனத்தில் பணியில் இருப்பர். அவர்களுக்கு சம்பளமாக 2,500 ரூபாய் வரை வழங்கப்படும்.

மின்சார கட்டணம், பராமரிப்பு செலவு, இதரசெலவு போக லாபம் கணிசமாக இருக்கும்.பொது சொத்தான நிலத்தடி நீரை உறிஞ்சி, தனிநபர்கள் கணிசமான லாபம் சம்பாதிக்கும் ஒருகுறைந்த முதலீட்டு தொழிலாகவே இந்த கேன் குடிநீர் உற்பத்தி தொழில் உள்ளது.

இதனால் தான் இந்த தொழில் புற்றீசல் போலவேகமாக பரவி வருகிறது. இந்த தருணத்திலா வதுஅரசு இதை முறைப்படுத்த உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும்.

குடிநீரில் தாது பொருட்கள் குடிநீரில், சோடியம், பொட்டாசியம், கால்சியம்,மெக்னீசியம், புளூரைடு, இரும்பு, செம்பு, துத்தநாகம்,காரீயம், போன்ற தாதுப் பொருட்கள் கலந்திருக்கும்.

"குடிநீரில் கலந்திருக்கும் இந்த தாதுப் பொருட்களின்எண்ணிக்கை மற்றும் அளவு, இடத்திற்கு இடம்வேறுபடும். தாதுப் பொருட்கள், அளவிற்கு அதிகமாக கலந்திருக்கும் குடிநீரை குடித்தால், உடல் நலத்திற்குபாதிப்பு ஏற்படும் என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிஒருவர் கூறியதாவது:ஒரு லிட்டர் குடிநீரில், அதிகபட்சம், 500 மில்லி கிராம், தாதுப் பொருட்கள் மற்றும் 20 அலகு நுண்துகள்கள் கலந்திருக்கலாம். இந்த அளவுகள் அதிகமாக உள்ள குடிநீரை குடித்தால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் கற்கள் உருவாவது,பற்களில் மஞ்சள் கறை படிவது போன்ற உடல்நலபாதிப்புகள் ஏற்படும்.

சென்னையில் உள்ள, 25 தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில், அடுத்தடுத்து மாதிரிகள்எடுத்து சோதனை செய்தோம். அதில், ஆறு நிலையமாதிரிகளில், "பாதுகாப்பற்ற தண்ணீர்; குடிக்க பயன்படுத்த முடியாதவை' என, உறுதியானது.அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க,நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.

மேலும், 17 நிலையங்களில், தரம் குறைவானதண்ணீர் என, கண்டறிந்தோம். தரத்தை மேம்படுத்தஅறிவுறுத்தியுள்ளோம். 25 நிறுவனங்களில், இரண்டுநிறுவனங்கள் மட்டுமே தரமான குடிநீரைதயாரித்தன. எனவே, பாதுகாக்கப்பட்ட குடிநீர் என,தனியார் நிறுவனங்கள் தரும் குடிநீர் கேன்களைநம்பி வாங்க வேண்டாம். பொதுமக்கள், குடிநீர்வாரிய குடிநீரை பயன்படுத்துவதே நல்லது.இவ்வாறு அவர் கூறினார்.

நம்பலாம் குடிநீர் வாரியம் பாதுகாப்பான குடிநீர் வழங்காததால்தான், தாங்கள் தனியார் நிறுவனங்களின் குடிநீர்கேன்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகசென்னைவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.இதுகுறி
த்து குடிநீர் வாரிய உயர் அதிகாரி ஒருவர்கூறியதாவது:

பாதுகாப்பான குடிநீர் வழங்க எல்லா நிலைகளிலும் கண்காணித்து, குளோரின் அளவை உறுதிசெய்தே வினியோகிக்கிறோம். தரமான சிகிச்சைஇருந்தும், நடுத்தர மக்கள், அரசு மருத்துவமனைகளை விட்டு, தனியார் மருத்துவமனைகளை நாடுவதுபோல், ஒரு சில ஆண்டுகளாக, தனியார் குடிநீர்கேன்கள் மீது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.குழாய் பழுது, அழுத்த பிரச்னைகள் இருக்க தான்செய்கின்றன.

எனினும் முன்பு இருந்ததுபோல், அவ்வளவாக இல்லை.புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில், மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப குடிநீர் தர முடியவில்லை. படிப்படியாக அதற்கான பணிகள் நடக்கும். பாதுகாக்கப்பட்டது என, கண்டபடி தாதுக்களைசேர்த்து, கண்ட கண்ட பெயர்களில் கிடைக்கும் தனியார் குடிநீரை நம்புவதைவிட, குடிநீர்வாரியத்தின் குடிநீரை நம்பி குடிக்கலாம்; காய்ச்சிகுடியுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment