Apr 12, 2013

காசைக் கொடுத்து நோயை வாங்கலாமா?பொதுமக்களே உஷார்!

கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில், குளிர்பானம் என்ற பெயரில் பல போலி குளிர்பான நிறுவனங்கள் தலைதூக்க தொடங்கிவிட்டன. இதனை கட்டுப்படுத்த உணவு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிலையில் பொதுமக்களும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம்.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், போலிகுளிர்பானங்களின் விற்பனையும் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு வந்த புகாரையடுத்து, கடந்த வாரம் சென்னையின் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் ஏராளமான போலி குளிர்பானங்கள் மற்றும் சுகாதாரமற்ற குடிநீர், மோர் பாக்கெட்டுகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. ஏழை மக்களை குறிவைத்து, இதுபோன்று கலப்படப் பொருட்கள் சந்தைக்கு வருவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
தரமற்ற, கலப்பட குளிர்பானங்களை பயன்படுத்துவதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கலப்பட குளிர்பானங்களுக்கு பதிலாக, இயற்கையாக கிடைக்கும் இளநீர், தர்பூசணி, போன்றவற்றை பருகலாம் எனவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஏழை மக்களை குறிவைத்து களம் இறங்கியிருக்கும் இதுபோன்ற நிறுவனங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்காணித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகன்றனர்.

No comments:

Post a Comment