Sep 7, 2019

ஹோட்டல் கதவு இப்படித்தான் இருக்கணுமாம்! உணவு ஆணையம் கெடுபிடி

உணவு தயாரிப்பில் ஒரே எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதைத் தடுக்கவும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.



ஹோட்டல் கதவு இப்படித்தான் இருக்கணுமாம்! உணவு ஆணையம் கெடுபிடி
ஹைலைட்ஸ்
  • ஹோட்டல், ரெஸ்டாரெண்ட் கதவுகளில் தரக்குறியீடு இருக்க வேண்டும்.
  • ஏற்கெனவே ஆன்லைன் உணவு விற்பனையில் இந்த விதி இருக்கிறது.
உணவகங்கள் நுழைவுவாயிலிலேயே தங்களுடைய தரக்குறியீட்டை காட்சிப்படுத்த வேண்டும் என்ற விதிமுறை விரைவில் அமலுக்கு வரக்கூடும்.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் இது குறித்து பரிசீலித்து வருகிறது. ரெஸ்டாரெண்டுகள், ஹோட்டல்கள் போன்றவற்றில் பாதுகாப்பான உணவு கிடைப்பதையும் உணவின தரம் சிறப்பாக இருப்பதையும் உறுதிசெய்ய இந்த விதிமுறையை நடைமுறைக்குக் கொண்டுவருவது பற்றி ஆலோசிக்கிறது. 
ஏற்கெனவே ஆன்லைன் உணவு விற்பனையில் இந்த விதியை கட்டாயம் ஆக்கியிருக்கிறது. இதுவரை 1.7 லட்சம் உணவு பாதுகாப்பு கண்காணிப்பாளர்களுக்கு பயற்சி அளிக்கப்பட்டுள்ளது என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தின் தலைவர் பவன் அகர்வால் தெரிவிக்கிறார். 
நுழைவுவாயிலில் / வாசல் கதவில் தரக்குறியீட்டை காட்சிப்படுத்துவது தொடர்பான விதிகளை நிர்ணயம் செய்வது பற்றி ஆணையம் விவாதித்துக்கொண்டிருக்கிறது. அந்த விதிகள் அமலுக்கு வந்ததும் தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, விதியை மீறுபவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். 
உணவு தயாரிப்பில் ஒரே எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதைத் தடுக்கவும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. 
இதனிடையே, காலாவதித் தேதியைத் தாண்டியும் பொருட்களை சலுகை விலையில் விற்பதற்கு அனுமதிக்கலாம் எனவும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் பரிசலிப்பது கவனிக்கத்தக்கது.

No comments:

Post a Comment