Jul 1, 2018

தேங்காய் எண்ணெய்யில் கலப்படம் செய்த 51 நிறுவனங்களுக்கு சீல்!

கொச்சின்: 51 நிறுவனங்கள் கலப்படத்தில் ஈடுபட்டதால், உணவு பாதுகாப்புத் துறைஅதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 
கேரள மாநிலத்தில் அதிக தென்னை மரங்கள் காணப்படுகின்றன. இதனால் தேங்காய் விளைச்சல் அதிகம். எனவே அம்மாநில மக்கள் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி வருகின்றனர். 
ரீபைண்ட் எண்ணெய்யில் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருட்கள் இருக்கின்றன. எனவே இதனை பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை. தேங்காயில் எண்ணெய்யில் இருக்கும் கொழுப்பு, நல்ல கொழுப்பு ஆகும். 
இந்நிலையில் ரீபைண்ட் எண்ணெய் பயன்படுத்துவோரும், தற்போது தேங்காய் எண்ணெய் பயன்பாட்டிற்கு மாறியுள்ளனர். இதனால் எண்ணெய் வியாபாரம் நிறுவனங்கள் நல்ல லாபம் ஈட்டி வருகின்றன.
ங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கும் தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த சூழலில் தேங்காய் எண்ணெய்யில் கலப்படம் செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார்கள் வந்தன. 
இதையடுத்து பாலக்காடு, கோழிக்கோடு, கொச்சி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 51 நிறுவனங்கள் சிக்கின. இவற்றிற்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment