Aug 14, 2017

காரில் கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, காரில் கடத்தி வரப்பட்ட, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்து, மயிலாடுதுறையை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.
பெங்களூருவில் இருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக, தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், காரில் கடத்தப்படுவதாக டி.எஸ்.பி., ரவிக்குமாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் அன்புமணி மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி, ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பையனப்பள்ளி டோல்கேட் அருகே நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, கிருஷ்ணகிரி நோக்கி வந்த மாருதி ஈகோ காரை, நிறுத்தி சோதனை செய்தனர். அதில், பெங்களூருவில் இருந்து மயிலாடுதுறைக்கு, 23 பெட்டிகளில், 47 ஆயிரம் பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு, ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய். இதையடுத்து, போலீசார் புகையிலை பொருட்களுடன், காரை பறிமுதல் செய்தனர். காரில் வந்த மயிலாடுதுறை அடுத்த ரயில்வாடியை சேர்ந்த முனிஷ்வரன், 40, சீனிவாசன், 38, ஆகியோரை கைது செய்தனர்.

No comments:

Post a Comment