Apr 26, 2017

உணவு துறையில் கூண்டோடு மாறுதல்? : 'பொங்கும்' அலுவலர்கள்

சிவகங்கை: உணவு பாதுகாப்பு துறை துவங்கியது முதல் ஒரே இடத்தில் பணிபுரியும் ஊழியர்களை கூண்டோடு மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நுகர்வோர்களுக்கு பாதுகாக்கப்பட்ட உணவு பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யவும், கலப்படத்தை தடுக்கவும் நாடு முழுவதும் 2011 ஆக.,5 உணவு பாதுகாப்புத்துறை துவங்கப்பட்டது. 
தமிழகத்தில் இத்துறையில் 32 மாவட்ட நியமன அலுவலர்கள், 385 வட்டார உணவு 
பாதுகாப்பு அலுவலர்கள், 199 நகர் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் என, 616 பேர் நியமிக்கப்பட்டனர். இதில் மாவட்ட நியமன அலுவலர்களாக டாக்டர்களும், உணவு பாதுகாப்பு அலுவலர்களாக உள்ளாட்சி அமைப்பு மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டனர். 
தற்போது 100 க்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் காலியாக 
உள்ளன.இத்துறை துவங்கியதில் இருந்தே, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்படவில்லை. தற்போது, அவர்களை கூண்டோடு மாற்ற, உயர்அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கூறியதாவது: நகரங்களில் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்களும், கிராமங்களில் சுகாதாரத்துறை ஊழியர்களும் உணவு பாதுகாப்பு அலுவலர்களாக உள்ளனர். 
அவர்களை மாறிமாறி இடம் மாற்று வதால் குழப்பம் ஏற்படும். மத்திய அரசு விதிமுறைப்படி, உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு மாவட்ட நியமன அலுவலராக பதவி உயர்வு அளிக்க வேண்டும். தமிழகத்தில் மாவட்ட நியமன அலுவலர்களாக டாக்டர்களை நியமிப்பதால், எங்களுக்கு பதவி உயர்வு 'கானல் நீராக' உள்ளது.இவ்வாறு கூறினர்.

No comments:

Post a Comment