சேலம்: சேலத்தில், 2,000 கிலோ கலப்பட சோம்பு பறிமுதல் செய்யப்பட்டது. சேலம், செவ்வாய்ப்பேட்டை, பால்மார்க்கெட், லாங்லிரோடு பகுதியில் உள்ள மளிகை கடைகளில், கலப்பட பொருட்கள் விற்பதாக, அடிக்கடி புகார் எழுந்தது. இதனால், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தலைமையில், அலுவலர்கள் நேற்று சோதனை மேற்கொண்டனர். மளிகை கடை, குடோன் என, 20க்கும் மேற்பட்ட இடங்களில், காலை, 10:30 மணி முதல், மதியம், 1:30 மணி வரை சோதனை நடந்தது. அதில், கோபால் என்பவருக்கு சொந்தமான குடோனில், பச்சை சாயம் ஏற்றப்பட்ட, 2,000 கிலோ கலப்பட சோம்பு பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடித்து, அவற்றை பறிமுதல் செய்தனர்.
அனுராதா கூறுகையில், ''பறிமுதல் செய்த கலப்பட சோம்பின் மதிப்பு, 2.6 லட்சம் ரூபாய். அதன் மாதிரி எடுத்து, பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு, உரிமையாளர் கோபாலுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளோம்,'' என்றார்.
No comments:
Post a Comment