சேலம்: தாரமங்கலம் பஸ் ஸ்டாண்டில், சுகாதார சீர்கேடு நிறைந்த இரு ஓட்டல்களுக்கு, நோட்டீஸ் வழங்கி, உணவுபாதுகாப்பு அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தலைமையில், நேற்று தாரமங்கலம் பகுதியில், சோதனை மேற்கொள்ளப்பட்டது. பஸ் ஸ்டாண்டு, காய்கறி கடைகள், ஓட்டல்கள், பள்ளிக்கூட பகுதி கடைகள் உள்ளிட்ட நிறுவனங்களில் அலுவலர்கள் இளங்கோவன், சரவணன், சிரஞ்சீவி, மாரியப்பன் ஆகியோர் கொண்ட குழுவினர், சோதனையில் ஈடுபட்டனர். மதியம், 2:30 மணிக்கு துவங்கிய சோதனை, இரவு, 7:00 மணிவரை நடந்தது. பஸ் ஸ்டாண்டில், சுகாதார சீர்கேடு நிறைந்து, மோசமாக காணப்பட்ட மாயாபஜார் என்ற, இரு ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கப்பட்டது.
நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது: தடை செய்யப்பட்ட, 7,500 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், காலாவதியான அரை லிட்டர் அளவுள்ள, 120 பாட்டில் குளிர்பானங்கள், போலி குளிர்பான பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பதிவுச்சான்று அல்லது உரிமம் பெற நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment