Mar 1, 2017

உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

ஆத்தூர்:ஆத்தூரில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில், விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
இதில், உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா பேசியதாவது: உணவு சம்பந்தமான அனைத்து நிறுவனங்களும், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம், 2006ன்படி பதிவு மற்றும் உரிமை பெற வேண்டும். உணவுப்பொருள் தயாரிக்கும் இடங்களில் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும். ஊழியர்கள், ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவச் சான்று பெற வேண்டும். நகங்களை வெட்டி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.உணவு பண்டங்களை மூடி வைக்க வேண்டும். எலி, பூனை வராமல் பார்த்துக் கொள்ளவும், ஈ மற்றும் கரப்பான் பூச்சிகள் இருப்பதை தவிர்க்க வேண்டும். கடைகளில் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும். ஓட்டல்களில் உணவு பொருட்கள் பேக்கிங் செய்யும்போது, பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வேண்டும். எண்ணெய் பலகாரங்களை, பேப்பர்களில் பார்சல் செய்யக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார். உணவு பாதுகாப்பு அலுவலர்கள், மளிகை, ஓட்டல், டீக்கடைகள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment