Aug 2, 2016

மீன்களுக்கு நிறமூட்டும் ஜிலேபி பாக்கெட் பறிமுதல்

மேட்டூர்: மேட்டூரில், உடல் நலத்தை பாதிக்கும் வகையில் மீன்களில் பயன்படுத்திய ஜிலேபி பவுடரை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா உத்தரவுபடி, ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு, நேற்று, மேட்டூரில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 
அணைப் பூங்கா, முனியப்பன் கோவில் அருகே, கடை மற்றும் தள்ளுவண்டிகளில், வியாபாரிகள் பலர், வறுத்த மீன்களை விற்கின்றனர். அந்த மீன்கள் சிவந்த நிறத்தில் இருக்க, ஜிலேபி பவுடரை அதிகம் உபயோகிப்பது, ஆய்வில் தெரிந்தது. அதனால், வறுத்த மீன்கள் விற்கும் வியாபாரிகளிடம் இருந்து, 30 ஜிலேபி பவுடர் பாக்கெட்டுகளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். 
மேலும், ஒர்க் ஷாப் கார்னர் அருகே, கடையில் விற்பனைக்கு வைத்திருந்த காலாவதி குளிர்பானங்கள், பாதாம் பவுடர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment