Jun 19, 2016

உணவு பாதுகாப்பு துறை இடமாறுதல் கலந்தாய்வு

தமிழகத்தில், சுகாதார துறையின் கீழ், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத் துறை செயல்படுகிறது. உணவு கலப்படத்தை தடுத்தல், 
தரமான உணவுப் பொருட்கள் கிடைக்க வழி செய்தல், உணவு வணிகர்களை முறைப்படுத்துதல் போன்ற பணிகளை, இத்துறையினர் மேற்கொள்வர். 
இதற்காக, மாவட்டம் தோறும், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, 584 அலுவலர் பணி இடங்கள் உள்ளன. இதில், 483 பேர் பணியில் உள்ளனர்; 101 இடங்கள் காலியாக உள்ளன.
உள்ளாட்சிகளில் இருந்து, இப்பணிக்கு வந்த இவர்கள், ஐந்து ஆண்டுகளாக, ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றனர். இடமாறுதல் கலந்தாய்வு நடத்தக் கோரினர்; அரசு கண்டு 
கொள்ளவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த இத்துறையினர், போராட்டம் நடத்தினர். இதையடுத்து, 'வரும், 24, 25ம் தேதிகளில், சென்னை, மருத்துவ பணி இயக்குனரகமான டி.எம்.எஸ்., வளாகத்தில், இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்' என, அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment