Apr 29, 2016

உண்ணக்கூடிய பேக்கேஜிங்யை அறிமுகப்படுத்துகிறது கேஎப்சி

உணவுப்பொருளுடன் சேர்த்து அப்படியே சாப்பிடக் கூடிய `புட் பேக்கேஜிங் மெட்டீரியலை பரிசோதனை முறையில் பெங்களூர்-ல் அறிமுகபடுத்த உள்ளது கெண்டகி பிரைட் சிக்கன் (கேஎப்சி)
கர்நாடக அரசின் ‘பிளாஸ்டிக் வேண்டாம்’ கொள்கையுடன் இணைந்து, கேஎப்சி இந்த வாரம் பெங்களூர் நகரத்தில் அதன் சோதனையை தொடங்கும். பின் வாடிக்கையாளர்களின் பதில் அடிப்படையில் மற்ற நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
முதல் கட்டமாக டார்ட்டில்லா ரைஸ் பவுல் (tortilla rice bowl) மட்டும் ரைஸ் பவுல்களின் விற்பனையை அதிகரிக்க அப்படியே சாப்பிடக் கூடிய `புட் பேக்கேஜிங் மெட்டீரியலை கொண்டு அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் கிண்ணங்கள் கப்புகள் போன்றவற்றில் இருந்து பேப்பர்-க்கு மாறியுள்ள நிலையில் மேலும் பேக்கேஜிங் துறையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க இது உதவும் என நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment