Jan 11, 2016

உண்பது உணவா, உயிர்க்கொல்லியா?


உணவு தர விவசாயிகள் மட்டும் போதாது; தேனீக்களும் தேவை. தேனீக்களும் மகரந்தச் சேர்க்கையும் இல்லாவிட்டால் உலகம் கூடிய சீக்கிரம் செத்துவிடும். ஆக, தேனீக்கள் பிரச்சினை நம்முடைய பிரச்சினை.
தேனீக்களைக் கொன்றுக் குவிக்கும் ஒரு நோய் ‘காலனி கொலாப்ஸ்’ குறைபாடு. இந்தியத் தேனீ குடும்பத்தில் பெரும் சேதாரத்தை உருவாக்கியிருக்கும் நோய். இதற்கு முக்கியமான காரணம் ‘நியோனிகோடினாய்ட்ஸ்’ என்னும் பூச்சிக்கொல்லி. உலக நாடுகள் பலவற்றில் தடைசெய்யப்பட்டது.
பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி அவற்றை அழிக்கும் இந்தப் பூச்சிக்கொல்லி பயிர்களின் மீது தெளிக்கப்படுகிறது. ஆனால், அது கொல்வது விஷப் பூச்சிகளை மட்டுமல்ல; மகரந்தத்திலிருந்து தித்திக்கும் தேனைச் சேகரிக்கும் இனிய தேனீக்களையும்தான்.
புற்றுநோய் உண்டாக்கும் நச்சுத்தன்மை கொண்டது ‘கிளைஃபோசேட்’ என உலகச் சுகாதார நிறுவனம் என்றோ அறிவிக்கவிட்டது. இந்திய வேளாண் பட்டியலிலும் நம் உணவுத் தட்டிலும் இன்னும் ஸ்திரமாக ‘கிளைஃபோசேட்’ இருக்கிறது.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் 250-க்கும் மேற்பட்ட பூச்சிக்கொல்லிகளில் 109 அபாயகரமானவை என்கிறது அமெரிக்கா. பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்ட குறைந்தது 66 பூச்சிக்கொல்லிகள் இந்திய நிலங்களை ஆக்கிரமித்திருக்கின்றன. இதுபற்றியெல்லாம் எப்போது நாம் எதிர்வினையாற்றப்போகிறோம்?

1 comment: