Dec 26, 2015

1,076 உணவு பொருட்களில் கலப்படம்

பெங்களூரு: “கர்நாடகாவில், 10 ஆயிரத்து, 750 உணவு பொருட்கள், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், 1,076 உணவு பொருட்கள் தரம் குறைந்தவை அல்லது கலப்படமானவை என்பது தெரிய வந்தது,” என, உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு அதிகாரி சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரு ஆசிரியர் பவனில் நடந்த, தேசிய பாதுகாப்பு தின விழா நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:அண்மை நாட்களில், கலப்படமான உணவு பொருட்கள் விற்பது அதிகரிக்கிறது. மாநிலத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட, 10 ஆயிரத்து, 750 உணவு பொருட்களில், 1,076 உணவு பொருட்கள் கலப்படமானவை அல்லது தரமில்லாதவை என்பது தெரிய வந்தது; இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.உத்தர கன்னட மாவட்டம், சிர்சியில் உள்ள கடையொன்றில், கலப்படமான துவரம் பருப்பு விற்கப்படுவதாக, பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது.இதன் அடிப்படையில், அங்கு சென்று சோதனை நடத்தி, விற்பனை செய்தவருக்கு, மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கலப்படமான, தரமில்லாத உணவு பொருட்களை விற்பவருக்கு, 10 லட்சம் ரூபாய் வரையிலும், துாய்மையற்ற உணவு பொருட்களை விற்பவருக்கு, ஐந்து லட்சம் ரூபாய் அபராதம், ஆறு மாத சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.
தெரு ஓரத்தில் உணவு விற்பவர் முதல், பெரிய நிறுவனங்களில், உணவு பொருள் விற்பவர் வரை அனைவருக்கும் இச்சட்டம் பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment