Jul 3, 2015

மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானதே: கனடாவில் நற்சான்று

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேகி நூடுல்ஸ் தயாரிப்புகள் தரமானதாக உள்ளது என்று கனடா நாட்டு உணவு ஒழுங்குமுறை ஆணையம் சான்று அளித்துள்ளது.
இது குறித்து கனடா நாட்டு உணவு பரிசோதனை மற்றும் தர நிர்ணய ஆணையம் குறிப்பிடுகையில், "இந்தியாவில் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டதை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம். மக்களுக்கு உகந்த பொருட்களை மட்டுமே எங்களது உணவு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்கிறது.
அதன்படி, எங்களது பரிசோதனையின் முடிவில் மேகி நூடுல்ஸில் அபாயகரமான உட்பொருட்கள் எதுவும் இல்லை. அதனால் இந்தியாவிலிருந்து இறக்குமதியான மேகி தொடர்ந்து இங்கு விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது" என்றது.
முன்னதாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை பரிசோதித்த சிங்கப்பூர் ஆணையமும் அதில் அபாயகரமான உட்பொருட்கள் இல்லை என்று சான்று அளித்தது.
மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமான ரசாயன உப்பு மற்றும் காரீயம் கலந்திருப்பது தெரியவந்ததை அடுத்து பல்வேறு மாநிலங்கள் அதற்கு முதலில் தடை விதித்தன.
இறுதியாக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையமும் பரிசோதனை செய்து மேகி நூடுல்ஸுக்கு நாடு முழுவதும் கடந்த ஜூன் 5-ம் தேதி தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment