Jun 8, 2015

உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்

சேலம் : விஜயராகவாச்சாரியார் நினைவு நூலகம் வாசகர் மன்றம், சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் சார்பில், உலக சுற்றுச்சூழல் தின விழாவை முன்னிட்டு, சுற்றுப்புறச்சூழலும் உணவு பாதுகாப்பும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கூட்டம், விஜயராகவாச்சாரியார் நினைவு நூலகத்தில் நடந்தது. கன்ஸ்யூமர் வாய்ஸ் தலைவர் பூபதி தலைமை வகித்தார்.
செயலாளர் சங்கர் வரவேற்றார். மாவட்ட நியமன அலுவலர் மற்றும், உணவு பாதுகாப்பு, மருந்து நிர்வாகத்துறை அலுவலர் அனுராதா பேசியதாவது: சுற்றுப்புறம் பாதிப்பால், 95 சதவீதம் உணவும் பாதிக்கிறது. ஜவ்வரிசி, பருப்பு, ஆயில் உள்ளிட்ட அனைத்து பொருட்களிலும் கலப்படம் உள்ளது. வெல்லம் உற்பத்தி செய்வதிலும், கலப்படம் செய்கின்றனர்.கறும்புச்சாறு இல்லாமலே வெள்ளம் தயாரிக்கின்ற நிலை, தற்போது உருவாகியுள்ளது. வெல்லம் தயாரிப்பதற்கு, சூப்பர் பாஸ்பரஸ் உள்ளிட்ட பொருட்களை கலக்கின்றனர். வெல்லம் கெட்டித்தன்மை வருவதற்கு, ஐந்து வகையான சோடாக்களையும், கலர் வருவதற்கு கலர்பொடிகளையும் கலக்கின்றனர்.இது போன்ற கலப்படத்தை ஓமலூர் பகுதியில் தயார் செய்கின்றனர். ஆரம்ப கட்டத்தில் ஜவ்வரிசி, வெல்லம் ஆகியவற்றில் கலப்படம் செய்வதை தடுத்தோம். தற்போது, அவை மீண்டும் வளர்ச்சி பெற்று விட்டது. நூடுல்ஸினால் ஏற்படும் பாதிப்பு பற்றி பள்ளி, கல்லூரிகளில், விழிப்புணர்வு செய்கிறோம்.இவ்வாறு பேசினார்.பொருளாளர் பிரபாகரன், சேலம், கிரிலா ஹவுஸ் கிரிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நூலகர் சின்னதம்பி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment