May 29, 2015

'மேகி' பாக்கெட்டுகள் பரிசோதனை:உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவு


லக்னோ:நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும், 'மேகி நுாடுல்ஸ்' பாக்கெட்டுகளை பரிசோதனை செய்யும்படி, உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்தின் துணை ஆணையர் விஜய் பஹதுார் கூறியதாவது:குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் திறனுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய, மோனோ சோடியம் குளூடமேட் (எம்.எஸ்.ஜி.,) எனும் அமினோ ஆசிட் ரசாயனம், மேகி நுாடுல்சில் இருப்பதாக கண்டறியப்பட்டது.
தற்போது சந்தையில் விற்கப்படும் மேகி மாதிரி பாக்கெட்டுகள் சோதனைக் காக சேகரிக்கப்பட்டு வருகின்றன. உ.பி., மாநிலம், பாராபங்கி மாவட்டத்தில், 'மார்ச் 2014' தேதியிடப்பட்ட மேகி பாக்கெட்டில், மோனோ சோடியம் குளூடமேட் மற்றும் லெட் (ஈயம்) நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக உள்ளது. எனவே, பாராபங்கியில் இதன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதுடன் அவற்றை திரும்பப் பெறும்படி, 'நெஸ்லே' நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.மார்ச் 2014 தேதியிட்ட மேகி பாக்கெட்டுகளை தவிர மற்ற விற்பனை செய்யப்படும் மேகி பாக்கெட்டுகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதன் பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை.
இந்நிலையில், நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மேகி பாக்கெட்டுகளை பரிசோதனை செய்யும்படி, உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறிஉள்ளார்.

No comments:

Post a Comment