Apr 3, 2015

திருமண விருந்தில் 200 பேர் பாதிப்பு ராயக்கோட்டை மளிகை கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு

ராயக்கோட்டை, ஏப்.3:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே திருமண விருந்து சாப்பிட்டதில் 200க்கும் மேற்பட்டவர்கள் வந்தி, பேதியால் பாதிக்கப்பட்டனர். இதன் எதிரொலியாக ராயக்கோட்டை பகுதியில் உள்ள மளிகை கடைகளில் உணவு பாது காப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட் டம் ராயக்கோட்டை அருகே தொட்லாம்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண வீட்டில் விருந்து சாப்பிட்டவர்களுக்கு புட்பாய்சன் ஏற்பட்டு 200க்கும் மேற்பட்டோர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டனர். இவர்கள், ராயக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட உணவு துறை நிய மன அலுவலர் கலைவாணி, உனவு பாதுகாப்பு அலுவலர் கெலமங்லகம் சுவாமிநாதன், காவேரிப்பட்டனம் துளசிராமன், பர்கூர் இளங்கோவன் ஆகியோர் தொட்லாம்பட்டி சென்று விசாரணை நடத்தினர். அப்போது, திருமண விருந்திற்காக எந்த கடையில் மளிகை பொருட்கள் வாங்கப்பட்டது என்பது குறித்து விசாரித்தனர்.
பின்னர், ராயக்கோட்டைக்கு வந்து சம்பந்தப்பட்ட மளிகை கடையை முழுவதுமாக சோதனை செய்தனர். அப்போது, அந்த கடையில் திருமண விருந்துக்காக வாங்கிய பொருட்களின் மாதிரிகளை சேதனைக்காக சேகரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் சோதனை யில் ஈடுபட்டனர். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பொருட்கள் தரமானதாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

1 comment:

  1. புதிய தலைமுறை செய்திப்படி சிகிச்சை பலனின்றி சதயன் என்பவர் உயிரிழந்தார்.

    ReplyDelete