Feb 21, 2015

தேயிலை வாரியம் எச்சரிக்கை கலப்பட தேயிலை தூள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

குன்னூர், பிப். 21:
தென்னிந்தியாவில் நீலகிரி மாவட்டத்தில் தான் தேயிலை உற்பத்தி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு 63 ஆயிரம் சிறு குறு விவசாயிகள் உள்ளனர். இம்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள்கள் ஏல மையங்கள் மூலம் விற் பனை செய்வது போக மீத முள்ள தூள்கள் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு சில்லறை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில தொழிற்சாலைகளில் இரு ந்து சமவெளி பகுதிகளை சேர்ந்த பலர் தேயிலை தூளை மொத்தமாக வாங் கி சென்று அதில் கலப்படம் செய்து கொள்ளை லாபம் ஈட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் கோடை சீசன் துவங்க உள்ளதால் இதனை மைய மாக வைத்து கலப்பட தேயிலை தூள் விற்பனை யை அதிகரிக்க ஒரு சிலர் தீவிரமாக முயற்சி மேற் கொண்டு வருகின்றனர். இதுபோன்ற காரணங் களால் நீலகிரி தேயிலை தூளின் தரம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் இதுவரை எவ்வித பயனும் இல்லை.
இதுகுறித்து தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் அம்பலவாணன் கூறியதாவது: தரமான தேயிலை தூளை விற்பனை செய்ய தேயிலை வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கலப்படகாரர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந் தாண்டு கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், பொள் ளாச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை யில் 7 டன் கலப்பட தேயிலை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உணவு தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் இதுதொடர்பாக கண்காணிப்பு நடவடிக்கை எடுக்க மாநில சுகாதார துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
டீ கடைகள் மற்றும் பேக்கரிகளில் அதிகளவில் கலப்பட தேயிலை தூள் பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும் சுற்றுலா தளங்களிலும் கலப்பட தேயிலை விற்பனை அதிகரித்து வருவதாக தெரிய வருகிறது. இதனால் இம்மாத இறுதிக்குள்ள நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலா தளங்கள் மட்டுமில்லாமல் டீ கடைகள், ஓட்டல்களில் சுகாதார துறையினருடன் இணைந்து அதிரடி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உள் ளோம். கலப்பட தேயிலை தூள் விற்பனை குறித்து தக வல் ஏதேனும் கிடைக்கும் பட்சத்தில் பொதுமக்கள் உடனடியாக தேயிலை வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து புகார் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment