Feb 5, 2015

காலாவதி உணவுப்பொருட்கள் விற்பனை அமோகம் நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு

பந்தலூர், பிப். 5:
பந்தலூர் பகுதிகளில் உணவு பாது காப்பு துறை அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தாததால் காலாவதி உணவுப்பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
பந்தலூர். தேவாலா. கொளப்பள்ளி. உப்பட்டி. பிதர்காடு. நெலாக்கோட் டை. அய்யன்கொல்லி. எரு மாடு. சேரம்பாடி. உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான மளிகை கடைகள்.
பேக்கரிகள், ஓட்டல்கள் செயல்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான உணவுப்பொருட்கள் உரிய தயா ரிப்பு தேதி. காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு கிராம பகுதிகளில் விற் பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள் காலாவதியானவையாக உள்ளன என்று புகார் எழுந்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களில் பலர் பேக்கரிகளில் விற்பனை செய்யும் உணவுப்பொருட்கள். குளிர் பாணங்கள். பழரசங்கள் உள்ளிட்டவற்றை அதிகம் வாங்கி உண்கின்றனர். இதனால் மாணவர்களை பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.
ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் தயாரித்த உணவு பொருட் களை, எந்த வித விபரங்களும் இன்றி விற்பனை செய்கின்றனர்.சில நிறுவனங்கள் முன்தேதியிட்டு உணவுப்பொருட்களை விற்பனை செய்கின்றன இவைபெரும் பாலும் காலாவதியான உணவுப்பொருட்களாகவே உள்ளன.
இதனை பயன்படுத்துவோர் பல் வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகமும், உணவுப் பாதுகாப்பு துறையும் இதுபோன்ற காலாவதியான உணவு பொருட்கள் விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை யை தாமதமின்றி எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment