Jan 22, 2015

தடை செய்யப்பட்ட புகையிலை தடையின்றி தாராள விற்பனை

தேவாரம், ஜன.22:
தடை செய்யப்பட்ட புகையிலை தேவாரத்தில் தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக அரசு புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. இதனையடுத்து தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், உள்ளிட்ட ஊர்களை சுற்றிலும் உள்ள கிராமங்களில் அதிரடி சோ தனை நடத்தி புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்பு இதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இதனால் புகையிலை பொருட்கள் மிக தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, தேவாரம் பகுதிகளில் இருந்து தினந்தோறும் கேரளாவிற்கு அதிகளவில் வேலைக்கு செல்கின்றனர். இவர்களை குறி வைத்தே புகையிலை பொருட்கள் அதிகளவில் தேவாரத்தை சுற்றிலும் உள்ள கிராமங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. பெரும்பாலும் கம்பம், சின்னமனூரில் கொள்முதல் செய்யப்பட்டு இங்கு விற்பனை நடக்கிறது.
பெட்டிக்கடைகள், பலசரக்கு கடைகளில் மறைத்து வைத்து பான் மசாலா, புகையிலை பொருட்களை விற்பனை செய்கின்றனர். கிராக்கி அதிகம் என்பதால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பாக்கெட்டிற்கு ரூ.5 முதல் ரூ.7 வரை கூடுதலாக வைத்து விற்பனை செய்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அதிகளவில் போதை பாக்குகள், புகையிலை பொருட்கள் தடையின்றி விற்கப்படுகிறது. பள்ளிகளுக்கு அருகிலேயே விற்பனை நடந்தாலும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment