Dec 25, 2014

பதிவு செய்தால் மட்டுமே அன்னதானம் வழங்க முடியும் அதிகாரி தகவல்

சிதம்பரம், டிச. 25:
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தேர், தரிசன விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் செய்பவர்கள் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து அன்னதானம் வழங்குமாறு கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் வரும் ஜனவரி 4 மற்றும் 5ம் தேதிகளில் தேர் மற்றும் ஆருத்ரா தரிசன விழா ஆகியவை நடக்கிறது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குபவர்கள் முறைப்படி உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து பாதுகாப்பான உணவை மக்களுக்கு வழங்க வேண்டும்.
அன்னதானம் செய்பவர்கள் கோயில் நிர்வாகம், காவல்துறை அனுமதி பெற்ற பின், சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில உள்ள உணவு பாதுகாப்பு அலுவலரை அணுகி பதிவு செய்து கொள்ளவேண்டும்.

1 comment:

  1. திருவண்ணாமலையில் அப்படி நடந்ததா - Read in PESPRO -22nd post

    ReplyDelete