Dec 11, 2014

ஆன்லைன் மூலம் உணவு விற்பனை உரிமம் உணவு பாதுகாப்பு ஆணையர் தகவல்

புதுச்சேரி, டிச. 11:
புதுவை மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் கந்தவேலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
உணவு பாதுகாப்பு துறை 3.1.2014 முதல் இணையம் மூலம் உணவு உரிமம் மற்றும் பதிவு வழங்கி வருகிறது. வணிகர்கள் ஒரு ஆண்டிற்கு உரிமமோ, பதிவோ பெற்று இருந்தால், அதை இந்த மாதம் முதல் புதுப்பிக்க வேண்டும். ஒவ்வொரு உரிமம்/பதிவும் காலாவதி தேதிக்கு 60 தினங்களுக்கு முன்னதாக புதுப்பிக்க தகுதி வாய்ந்தது. 31வது நாளில் இருந்து 60வது நாட்களுக்குள்ளாக புதுப்பிக்கும் போது ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 மற்றும் ரூ.30 உணவு உரிமத்திற்கு மற்றும் பதிவிற் கும் அபராத தொகையாக வசூலிக்கப்படுகிறது.
அனைத்து புதுப்பித்தல் பணி இணைய தளம் மூலம் கட்டுப்படுத்தப்படுவதால், 31வது நாளில் இருந்து 60 நாட்களுக்குள்ளாக உரிமம், பதிவு புதுப்பித்தலின்போது அபராத தொகை கட்டாமல் புதுப்பிக்க இயலாது. எனவே, காலாவதி தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே உரிமத்தை புதுப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பிராந்தி, விஸ்கி, ரம், ஒயின், பீர் போன்ற மதுபானங்களும் உணவு பாது காப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் படி உணவு பொரு ளாக கருதப்படுகிறது. எனவே, மதுபானங்களை கையாளும் உணவு வணிகர்கள் அனை வரும் கலால் உரிமம் பெறு வது மட்டுமில்லாமல் உணவு உரிமம் பெறுவதும் கட்டாயமாகிறது. இறைச்சி கடைகள், திருமண மண்டபங்கள், அன்னதானம் வழங்கும் இறை தலங்கள், உணவு எடுத்து செல்லும் போக்குவரத்து வாகனங் கள், உணவகங்கள், தள்ளு வண்டிகள் போன்ற அனைவரும் உணவு உரிமம் மற்றும் பதிவு எடுப்பது அவசியமாகிறது. தகுதி படைத்த பதிவு சான்றாளர்களுக்கு அடையாள அட்டை இத்துறை மூலம் வழங்கப்படுகிறது.
குட்கா, பான்மசாலா மற் றும் நிக்கோட்டின் அல் லது புகையிலை பொருட் களை உணவு பண்டங்களில் சேர்த்து தயாரிப்பது, சேமிப்பது, விநியோகம் மற்றும் விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இத்தகைய பொருட் களை கையாள வேண்டாம் என உணவு வணிகர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மாறாக சட்டத்தை மீறுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க வழியுண்டு என்று எச்சரிக்கப்படுகிறது.
உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி பொட்டலத்தில் அடைத்து விற்பனை செய்யப்படும் அனைத்து உணவு பண்டங்களின் மீது உற்பத்தி தேதி, காலாவதி தேதி, தொகுதி எண் போன்ற விபரங்கள் குறிப்பிட வேண்டும். மேலும், 2.1.2015க்கு பின்பு அனைத்து பொட்டலங்களிலும் உரிம எண் குறிப்பிட்டு இருப்பது அவசியம். உரிமம், பதிவு பெற கடைசி நாளான 4.2.2015 வரை காத்திராமல், அனைத்து உணவு வணிகர்களும் உரிமம் மற்றும் பதிவு பெற முன்வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எந்தவொரு உணவு வணிகரும் நகராட்சி அல் லது பஞ்சாயத்து உரிமம் பெறுவதற்கு முன் உணவு உரிமம், பதிவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 வழக்கம் போல் நடைமுறையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment