Nov 28, 2014

தமிழக கறிக்கோழி, முட்டைகளுக்கு மருத்துவ சான்றிதழ் அவசியம் கேரளா அதிரடி

அன்னூர், நவ.27:
கேரள மாநிலத்தில் தற்போது பறவை காய்ச்சல் வெகு வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் இருந்து கேரளா கொண்டு செல்லும் கறிக்கோழி மற்றும் முட்டைகளுக்கு மருத்துவ சான்றிதழ் வாங்கி வர வேண்டும் என கேரள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநிலம் ஆழப்புழா பகுதிகளில் தற்போது, வாத்துகள் மூலம் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து கோழி, வீடுகளில் வளர்க்கப்படும் புறா, லவ் பேர்ட்ஸ் உள்ளிட்டவற்றிற்கும் பறவை காய்ச்சல் பரவவே கேரள முதல்வர் பறவை காய்ச்சலுக்கு காரணமான வாத்துகளை அழிக்க உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க கேரளாவில் இருந்து தமிழக கோழிப்பண்ணைக்கு வரும் வாகனங்கள் மற்றும் வேலையாட்களை பண்ணைக்குள் அனுமதிப்பதில்லை.
வாகனங்களில் மருந்துகள் தெளித்த பின்னரே அதுவும் பண்ணையின் ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கே அனுமதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் கோவை யை சுற்றி உள்ள பல்லடம், அன்னூர், பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் பரவாமல் இருக் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. முட்டை வைக்க கூடிய அட்டைகளுக்கும் மருந்து தெளிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கறிக்கோழி மற்றும் முட்டைகள் ஏற்றி செல்லும் வாகனங்களில் பறவைக்காய்ச்சல் இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரள மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. இல்லை என்றால் அவை திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment