Nov 21, 2014

கன்னியாகுமரி ஓட்டல்களில் அதிகாரிகள் கண்துடைப்பு சோதனை சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு

கன்னியாகுமரி, நவ.21:
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் நவ.17 முதல் ஜனவரி 20ம் தேதி வரை சீசன் கால மாகும்.
இந்த காலத்தில் நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கன்னியாகுமரிக்கு வருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள், மற்றும் சுற்றுலா பயணிகள் உணவு அருந்துவதற்காக உயர்ரக ஓட்டல்கள், நடுத் தர ஓட்டல்கள், சாலையோர சிற்றுண்டி கடைகள் என 100க்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ளன.
மேலும் சீசன் கடை களும் அமைக்கப்பட்டுள் ளன. கடந்த ஆண்டு சீசன் காலத்தில் வந்த கேரள ஐயப்ப பக்தர்கள் ஒரு ஓட்டலில் உணவருந்திய போது வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர். இது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.
இந்த ஆண்டு அதே போன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கன்னியாகுமரியில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை நடத்துவதாக கூறி கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் இங்கு எந்த குறைபாடும் இல்லை என கூறி சென்று விட்டனர். என்றாலும், சில கடைகளில் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப்படுவதாகவும், காலாவதியான உணவு பொருட்கள் மற்றும், விலை, உற்பத்தியாளர் விவரங்கள் அச்சிடப்படாத உணவு பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அதிகாரிகள் எதையும் கண்டுகொள்ளாமல் சோதனை என்ற போர்வையில் கண்துடைப்பு நாடகம் ஆடுவதாக சுற்றுலா பயணிகள் குற்றஞ்சாட்டினர்.இங்கு பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருவதால் நடை பாதை கடைகள், உணவகங்களில் விற்பனை செய்யும் உணவு பொருட்கள் பாதுகாப்பானவை என்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment