Nov 18, 2014

பழநி நகரில் அதிகரிக்கும் சாலையோர உணவு கடைகள் சுகாதாரம் கண்காணிக்கப்படுமா?




பழநி, நவ. 17:
சபரிமலை சீசனை முன்னிட்டு பழநி அடிவாரப் பகுதியில் சாலையோர உணவுக் கடைகள் அதிகரித்து வருகின்றன. இங்கு சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருட்கள் வழங்கப்படுவ தால், பக்தர்கள் நோயில் சிக்கும் ஆபத்து உள்ளது. எனவே சுகாதாரத்துறை கண்காணிக்க வேண்டு மென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கார்த்திகை மாதத்தில் பழநி கோயிலுக்கு ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். இவர்களை குறிவைத்து அடிவாரப் பகுதியில் ஏரா ளமான தற்காலிக உணவு கடைகள் மற்றும் பொம் மைக் கடைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன.
இங்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக் தட்டுகளில் பிளாஸ்டிக் பேப்பர் வைத்து வழங்கப்படுகிறது. உணவுப் பொருட்கள் சூடாக இருப்பதால் பேப்பர் உருகி நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. பிளாஸ்டிக் பேப்பர்களில் உணவு வழங்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த விதிமுறைகள் இங்கு கண்டுகொள்ளப்படுவதில்லை. பிளாஸ்டிக் பேப்பரிலேயே பிரதானமாக வழங்கப்படுகிறது. மேலும், எச்சில் தட்டுகளை முறையாகக் கழுவாமல் அப்படியே மற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இங்கு வந்து சாப்பிடும் பக்தர்கள் அந்த இடத்திலேயே கை கழுவுகின்றனர். மேலும், எச்சில் இலைகளை அங்கேயே போட்டு விடுகின்றனர். இவற்றை குறி வைத்து அடிவார பகுதி முழுவதும் ஏராளமான ஆடு, மாடு, நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இட்லி போன்றவை வெண்மையாகவும், இலகுவாகவும் இருக்க வேதிப்பொருட்கள் கலக்கப்படு கின்றன. வடை போன்றவற்றிற்கு தரமற்ற எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றது.
இதனால் பக்தர்களின் உடல்நலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் உணவு பொருட்களின் தரத்தை அடிக்கடி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பழநி உணவு பாதுகாப்பு அலுவலர் மோகனரங்கத்திடம் கேட்டபோது, �தொடர் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உணவுத்தட்டுகளில் பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்தாமல் இலை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவுப்பொருட்களில் வேதிப்பொருட்கள் கலந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

No comments:

Post a Comment