Nov 12, 2014

கழுகுமலையில் அதிகாரிகள் அதிரடி பல ஆயிரம் ரூபாய் புகையிலை பொருட்கள் அழிப்பு


கழுகுமலை, நவ. 12:
மாவட்ட உணவு பாது காப்பு நியமன பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ஜெகதீஸ்சந்திரபோஸ் தலை மையில் கோவில்பட்டி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முத்துக்குமார், மாரிச்சாமி, கயத்தார் உணவு பாதுகாப்பு அலு வலர் பொன்ராஜ், ஸ்ரீவை குண்டம் உணவு பாது காப்பு அலுவலர் டைட்டஸ்பெர்னான்டோ, புதூர் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவபாலன் ஆகி யோர் கழுகுமலை பகுதி யில் உள்ள பெட்டிகடை கள், மொத்த விற்பனை கடைகள், பள்ளிகள் அருகில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் அப்பகுதி கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பான் மசாலா உள்ளிட்ட 15 கிலோ எடையுள்ள புகை யிலை பொருட்களை பறி முதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 ஆயிர மாகும். தொடர்ந்து கழுகுமலை அருகில் உள்ள வானரமுட்டி, கயத்தார் உள்ளிட்ட பகுதி கடைகளில் ஆய்வு செய்தனர்.
இதில் கயத்தார் பகுதி மெயின் பஜார் கடைகள் மற்றும் கடம்பூர் சாலையில் உள்ள கடைகளில் விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட் கா, கணேஷ் உள்ளிட்ட புகையிலை பொருட் களை கண்டுபிடித்து பறிமுதல் செய்து அழித்தனர்.
மேலும், புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்யும் கடைக்கரார்கள் மீது நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

No comments:

Post a Comment