Sep 23, 2014

நலச்சங்க கூட்டத்தில் வலியுறுத்தல் ஜவ்வரிசி ஆலைகளில் ஈர மாவு உற்பத்தியை நிறுத்தும் பிரச்னைக்கு தீர்வு


ஆத்தூர், செப்.23:
ஜவ்வரிசி ஆலைகளில் ஈர மாவு உற்பத்தியை தடுத்து நிறுத்தும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென நலச்சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வடசென்னிமலையில் தமிழக சிறுதொழில் ஸ்டார்ச் மாவு உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் கூட்டம் நடைபெற் றது. செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் நாமக்கல் மாவ ட்டத்தை சேர்ந்த பாபு, செந்தில், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர், செந்தில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம், ரவி, குமரேசன், பெரியசாமி, அசோகன், சிவசண்முகம், ராஜாமணி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் ஆத்தூர் பகுதியில் சில ஜவ்வரிசி ஆலைகள் சங்கத்தினர் கடந்த 20ம் தேதி முதல் காலவறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மரவள்ளி உற்பத்தி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், மரவள்ளிகிழங்கு தோல் உரிக்கப்பட்டு எந்தவித ரசாயன கலப்புமின்றி ஈர மாவாக உற்பத்தி செய்ய உணவு பாதுகாப்பு துறையினர் தடை செய்வது எந்த வித த்தில் நியாயம் என்பதை விளக்காமல் உள்ளனர்.
இதனால், தற்போதுள்ள மரவள்ளி ஆலை களில் ஈர மாவு உற்பத்தி செய்ய முடியாத நிலை உள் ளது. மேலும், சில பெரிய உற்பத்தியாளர்களின் தூண்டுதலின் காரணமாக தற்பேது செயற்கையாக உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், போராட்டம் நடப்பதாகவும் பொதுமக்களுக்கும் அரசு நிர்வாகத்திற்கும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், எங்கள் சங்கத்தினர் இதுபோன்ற போராட்டம் எதிலும் ஈடுபட விரும்பவில்லை.
எங்களின் ஒரே கோரி க்கை ஈர மாவு உற்பத்தியை தடுக்காமல் இருக்க வேண் டும் என்பது தான். இதன ல் மரவள்ளி விவசாயிகளு க்கு உரிய விலை கிடைக்கும். எனவே, தற்போது உணவு பாதுகாப்பு அலுவலர்களின் ஈர மாவு உற்பத்தியை தடுப்பதை அரசு தலை யிட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் பொருளா ளர் பாலாஜி நன்றி கூறினார்.ELANGOVAN N

No comments:

Post a Comment