Sep 22, 2014

முறைகேடாக ஐ.எஸ்.ஐ., பயன்பாடுகுடிநீர் நிறுவனம் மீது நடவடிக்கை

சென்னை:தர்மபுரியில், ஐ.எஸ்.ஐ., உரிமத்தை புதுப்பிக்காமல், முறைகேடாக பயன்படுத்திய, குடிநீர் நிறுவனம் மீது, இந்திய தர நிர்ணய ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், இந்திய தர நிர்ணய ஆணையத்தில் உரிமம் பெற வேண்டும். இவ்வாறு உரிமம் பெறாமல், போலியாக ஐ.எஸ்.ஐ., பயன்படுத்தியும், உரிமத்தை புதுப் பிக்காமலும் குடிநீர் தயாரிப்பு, வினியோகம் நடந்து வருகிறது.
ரகசிய தகவலின்படி, தர்மபுரி மாவட்டம், பஞ்ச பள்ளியில் செயல்பட்டு வந்த குடிநீர் நிறுவனத்தில் (அக்குவா சகானா), இந்திய தர நிர்ணய அதிகாரிகள், சமீபத்தில், திடீர் சோதனை நடத்தினர்.அப்போது, காலாவதியான ஐ.எஸ்.ஐ., உரிமத்தை புதுப்பிக்காமல், முறைகேடாக பயன்படுத்தி, குடிநீர் தயாரித்து, பாட்டில்களில் நிரப்பிக் கொண்டிருந்தனர். இதையடுத்து, குடிநீர் பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்திய தர நிர்ணய ஆணையச் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஓராண்டு சிறைத் தண்டனையோ, 50 ஆயிரம் ரூபாய் அபராதமோ, அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
'போலியாகவே, காலாவதியான ஐ.எஸ்.ஐ., பயன்பாடு பற்றி தெரிந்தால், பொதுமக்கள், 044-2254 1220 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்; தகவல்கள் தருவோரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்' என, இந்திய தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment