Sep 24, 2014

முத்தரப்பு கூட்டத்தில் முடிவு 4 நாட்களாக நடந்த ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்


நாமக்கல், செப்.24:
ஜவ்வரிசி தயாரிப்பில் ஈரமாவு பயன்படுத்த தடை விதிக்க்கோரி கடந்த 4 நாட்களாக நடந்த ஆலை உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஜவ்வரிசி தயாரிப்பில் ஈர மாவிற்கு அரசு தடை விதித்து மரவள்ளி கிழங்குகளை மட்டுமே பயன்படுத்திட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இயற்கை ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் கடந்த 20ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நாமக்கல் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையில் முத்தரப்புக் கூட்டம் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. சேலம் சேகோ சர்வ் மேலாண்மை இயக்குநர் சாந்தா, சுந்தரம் எம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், �மரவள்ளிக்கு பதிலாக நேரடியாக வெளியிலிருந்து கொண்டு வரப்படும் ஈரமாவில் மக்காச்சோளம், கெமிக்கல் உள்ளிட்டவைகளை எளிதில் கலப்படம் செய்ய முடியும். இதனால் ஜவ்வரிசி உணவுப் பொருளின் தரம் குறைந்து இதற்கான சந்தை வாய்ப்புகளும் பாதிக்கப்படுகின்றன. இதனால், ஜவ்வரிசி தொழிலே அழியும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, ஜவ்வரிசி உற்பத்தியில் மரவள்ளிக் கிழங்குகளுக்கு பதிலாக ஈரமாவை பயன்படுத்திட முழுமையாக தடை விதிக்க வேண்டும்,� என்றனர்.
மரவள்ளி கிழங்கு விவசாயிகள் கூறுகையில், தற்போதுதான் மரவள்ளி அறுவடை காலமாக உள்ள நிலையில் ஜவ்வரிசி ஆலை களின் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் விவசாயிகளுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்படும். ஒவ் வொரு ஆண்டும் மரவள் ளிக் கிழங்கு அறுவடை சமயத்தில் ஆலை நிர்வாகத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்து விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் செய்கின்றனர். எனவே, ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை மாவட்ட நிர்வாகம் முடி வுக்கு கொண்டு வர வேண் டும். விவசாயிகளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யப் பட வேண்டும். என்றனர்.
பின்னர், கலெக்டர் தட்சிணாமூர்த்தி பேசுகையில், “ ஜவ்வரிசி ஆலைகள் நாமக்கல் மட்டுமின்றி சேலம், தர்மபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ளது. எனவே, ஜவ்வரிசி தயாரிப்பில் ஈரமாவை பயன்படுத்துதல் குறித்து தமிழக உணவு பாதுகாப்புத் துறை ஆணையர், இதர மாவட்ட கலெக்டர்களுடன் கலந்தாலோசித்து உரிய முடிவு தெரிவிக்கப்படும். அது வரை ஜவ்வரிசி தயாரிப்பில் தற்போதுள்ள நிலையே தொடரும்,” என்றார்.
இதை தொடர்ந்து ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று, நாளை முதல் ஆலைகள் இயங்கும் என தெரிவித்தனர். இக்கூட்டத்தில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் முருகன், நாமக்கல் கோட்டாட்சியர் காளிமுத்து, ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள், மரவள்ளி கிழங்கு விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் குற்றசாட்டு
முத்தரப்பு கூட்டம் குறித்து விவசாயிகள் கூறியதாவது, தொடர்ந்து 2வது ஆண்டாக, மரவள்ளி கிழங்கு அறுவடை காலத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க செய்யாமல் செய்கின்றனர். குறிப்பிட்ட சில ஆலை நிர்வாகத்தினர் மட்டும் சுய ஆதாயத்திற்காகவும் மற்ற ஆலைகளை நடத்த விடாமல் தடுப்பதற்காகவும் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர்.
ஆனால் பல ஆலைகள் வழக்கம் போல் இயங்கின. விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆலை நிர்வாகத்தினர் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். மேலும், கெமிக்கல் கலப்பது, மக்காசோள மாவு கலப்பது, ஈரமாவு கலப்பது என ஒவ்வொரு முறையும் பிரச்சனை வரும் பொழுதும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டும், இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை. தற்பொழுதும் கண்துடைப்பு கூட்டமாகவே முத்தரப்பு கூட்டம் நடத்து முடிந்துள்ளது. என விவசாயிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment