Aug 10, 2014

உணவு பொருட்கள் தயாரிப்பு: உரிமம் பெற கால அவகாசம் நீட்டிப்பு

பெங்களூரு : உணவு தயாரிப்பு பதிவு அல்லது லைசன்ஸ் பெற, கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதற்கு முன், பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவுபடி, உணவு தயாரித்து சப்ளை செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள் பதிவு செய்து கொள்ளவும், லைசன்ஸ் பெறவும், ஆக., 4ம் தேதி கடைசி நாளாக இருந்தது. இந்த கெடுவை நீட்டித்துள்ள மத்திய அரசு, 2015, பிப்., 4ம் தேதி வரை, கால அவகாசம் வழங்கியுள்ளது. 
இந்த கால அவகாசத்துக்குள், எந்த விதமான உணவு தயாரிப்பு, விற்பனையில் ஈடுபடுபவர்கள், தங்களின் வருவாய்க்கு தகுந்தது போன்று, பதிவு அல்லது லைசன்ஸ் பெற வேண்டும். கர்நாடகாவில், இதுபோன்ற உணவு விற்பனை தொழிலில் ஈடுபடும் வியாபாரிகள், 6 லட்சம் பேர் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில், ஜூன் 30ம் தேதி வரை, 32 ஆயிரத்து 980 பேர் லைசன்ஸ் பெற்றுள்ளனர். ?.?? லட்சம் பேர், பதிவு சான்றிதழ் பெற்றுள்ளனர். 
உணவு விற்பவர்கள் கலப்படமாக, அசுத்தமான, கெட்டுப்போன, காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்வது தெரிய வந்ததால், சகாயவாணி 0802346 5403 அல்லது டோல் பிரி எண் 180042 513825 என்ற எண்களில் தெரிவிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment