Jul 9, 2014

ஆலங்குளத்தில் அதிகாரிகள் அதிரடி ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் அழிப்பு


ஆலங்குளம் ஜூலை 9:
ஆலங்குளத்தில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கருணாகரன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் அடங்கிய அதிகாரி கள் மற்றும் ஊழியர் குழு வினர் ஆலங்குளம் கடை களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா பாக்குகள், மெழுகு தடவிய ஆப்பிள் பழங்களை பறிமுதல் செய்தனர்.
ஆலங்குளம் மெயின் ரோட்டில் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள மாம்பழ குடோனில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்கள் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் புதைத்து அழிக்கப்பட்டன.
தொடர்ந்து, கடை உரிமையாளர்களிடம் காலாவதியான உணவு பொருட்கள் விற்கக்கூடாது, அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக் போன்றவற்றை விற்கக் கூடாது, கார்பைடு கல் வைத்து பழங்களை பழுக்க வைக்க கூடாது எனவும், மீறி அவற்றை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து சென்றனர்.

No comments:

Post a Comment