Jul 31, 2014

சிதம்பரத்தில் காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்டுகள் பறிமுதல்


சிதம்பரம், ஜூலை 31:
சிதம்பரம் எம்கேதோட்டம் அம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன் மகன் ஆனந்தபாலன் (30). இவர் சிதம்பரம் கண்ணங்குடி புறவழிச்சாலை அருகே உள்ள பங்க் கடை ஒன்றில் பிஸ்கெட் பாக்கெட் வாங்கி சாப்பிட்டுள்ளார்.
சிறிது நேரத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் அந்த பிஸ்கட் பாக்கெட் கவரை அவர் பார்த்த போது 2013ம் ஆண்டோடு காலாவதியானது தெரியவந்தது. உடனடியாக அவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா உத்தரவின் பேரில் குமராட்சி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் மாரிமுத்து, சிதம்பரம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் பத்மநாபன் ஆகியோர் நேற்று மதியம் சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள சம்மந்தப்பட்ட கடையில் சோதனை நடத்தினர். அப்போது கடையில் காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்டுகள் இருந்துள்ளன. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதனை பறிமுதல் செய்து அதனை ஆய்வுக்காக எடுத்து சென்றனர். மேலும் அக்கடையில் தயாரிப்பு தேதி இல்லாத சிப்ஸ் பாக்கெட்டுக�யும் பறிமுதல் செய்தனர். சிதம்பரம் நகரம் முழுவதிலும் உள்ள கடைகளில் காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டுகள், டீத்தூள் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுகிறதா என சோதனை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment