Jul 23, 2014

திருத்தணி முருகன் கோயில் அருகில் 1 லட்சம் மதிப்புள்ள தரமற்ற உணவு பொருள் பறிமுதல்

திருத்தணி, ஜூலை 23:
திருத்தணி முருகன் கோயில் அருகே ரூ.1 லட்சம் தரமற்ற உணவுப் பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருத்தணியில் நடைபெற்ற ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பான உணவுப் பொருட்களை வழங்கும்படி அங்குள்ள கடைகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் குமார் ஜெயந்த் உத்தரவிட்டிருந்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மேற்பார்வையில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் செந்தில் முருகன் கண்காணிப்பில், திருத்தணி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் தலைமையில், மோகன சுந்தரம், செல்வம், எட்வர்ட், வேதநாயகம், பஞ்சாட்ச்சரம், தியாகராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர், கோயில் அருகே உள்ள உணவு விடுதிகள், தேநீர் கடை, பேக்கரி, பெட்டிக்கடை மற்றும் அன்னதானம் வழங்கும் இடங்களில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்குள்ள கடைகளில் காலாவதியான, தரச்சான்று இல்லாத உணவுப்பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை அழித்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 comment:

  1. தொடரட்டும் நற்பணி ....

    ReplyDelete