May 22, 2014

சேலம் பழைய பஸ் நிலையத்தில் விற்பனை செய்த காலாவதியான 100 குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

சேலம், மே.22-
சேலம் பழைய பஸ் நிலையத்தில் விற்பனை செய்த காலாவதியான 100 குளிர்பான பாட்டில்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
சேலம் பழைய பஸ் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பழ ஜூஸ் கடை, டீக்கடை, பலக்கார கடை, பெட்டிக்கடை அதிகளவு உள்ளன. இந்த கடைகளில் காலாவதியான மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பெருமளவு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
அதன்பேரில், நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையில் அதிகாரிகள் பழைய பஸ் நிலையத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, சில பழஜூஸ் கடைகளில் அழுகிய பழங்களை பயன்படுத்துவதும், சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக கெமிக்கல் பவுடர் கலப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் அகற்றினார் கள்.
காலாவதியான பொருட்கள் பறிமுதல்
இதேபோல், பல கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் அதிகளவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடைகளில் இருந்து காலாவதியான 100 குளிர்பான பாட்டில்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறி முதல் செய்தனர். மேலும் பெட்டிக்கடைகளில் விற்பனை செய்வதை தடை செய்யப்பட்ட பான்மசாலா, குஸ்கா, புகையிலை போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர்களுக்கு இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும், தொடர்ந்து ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

No comments:

Post a Comment