Mar 5, 2014

ரேஷன் கடையில் காலாவதி டீத்தூள் பாக்கெட் விற்பனை எம்எல்ஏ சோதனையில் அம்பலம் - தர்மபுரியில் பரபரப்பு

தர்மபுரி, மார்ச் 4: 
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ரேஷன் கடையில், எம்எல்ஏ பாஸ்கர் திடீர் சோதனை மேற்கொண்டார். அப் போது, காலாவதியான டீத்தூள் விற்பனை செய்வது தெரியவந்தது. 
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அவ்வை நகரில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. சவுளுப்பட்டி, கொட் டாவூர், தடங்கம் மேட்டுக்கொட்டாய், பழைய கோட் டர்ஸ் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 1396 ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, சர்க் கரை உள்ளிட்ட பொருட் கள் வழங்கப்படுகிறது. இதில், விற்பனையாளராக கபிலன் பணியாற்றி வருகிறார். 
நேற்று காலை இந்த ரேஷன் கடையில் அரிசி, சர்க்கரை வழங்கப்பட்டது. அத்துடன் தமிழக அரசின் ஊட்டி டீத்தூளும் வழங்கப்பட்டது. ஆனால், அந்த டீத்தூள் பாக்கெட் காலவதியானது என தெரியவந்தது. இத்தகவல் அறிந்த தர்மபுரி எம்எல்ஏ பாஸ்கர் அவ்வைநகருக்கு நேரில் சென்று ரேஷன் கடையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது பாக்கெட்டில் 02.2013 என்ற முத்திரை பதித்த டீத்தூள் விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் எம்எல்ஏ புகார் தெரிவித்தார். மாவட்ட வழங்கல் துறை துணை மேலாளர் வேணுகோபால், நிர்வாக அலுவலர் (ஏஒ) ரத்தினசாமி ஆகியோர் ரேஷன் கடைக்கு வந்து காலாவதியான தேதி டீத்தூளை விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை செய்து, காலாவதி டீத்தூள் பாக்கெட்டுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
இதுகுறித்து எம்எல்ஏ பாஸ்கர் கூறியதாவது: 
தர்மபுரி அவ்வைநகர் ரேஷன் கடையில் காலாவதி டீத்தூள் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக தகவல் வந்தது. நேரில் சென்று ஆய்வு செய்தபோது 20 பெட்டியில் 4 பெட்டியிலிருந்த காலாவதியான டீத்தூளை விற்பனை செய்துவிட்டனர். ஒரு பெட்டியில் 100 கிராம் கொண்ட 50 பாக்கெட் டீத்தூள் இருந்தது. காலாவதியான 200 பாக்கெட் டீத்தூள் விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. ஒரு பாக்கெட்டின் விலை ரூ.15. 
ரேஷன் கடையில் அரசு ஊட்டி டீத்தூள் காலாவதி என கண்டுபிடித்த பின்னரே, அதிகாரிகள் விற்பனை செய்ய தடை செய்துள்ளனர். இதுபோல் காலாவதியான டீத்தூள் மாவட்டத்தில் பல்வேறு ரேஷன் கடைகளில் விற்கப்படுகிறது. அதையும் அதிகாரிகள் உடனடியாக கைப்பற்றி அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.

1 comment:

  1. அரசு நிறுவனங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்

    ReplyDelete