Feb 19, 2014

ரூ.20 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - வணிகவரிதுறை அதிகாரிகள் அதிரடி

கோவை, பிப். 19: 
சென்னையில் இருந்து கோவைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள ஹான்ஸ் புகையிலை பொருட்களை, வணிகவரிதுறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். 
தமிழகத்தில் ஹான்ஸ், கணேஷ், பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து கோவை ரங்கேகவுடர் வீதியில் உள்ள வடமாநில வியாபாரியின் குடோனுக்கு கடத்தி வருவதாக வணிகவரி துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், கோவை&அவிநாசி ரோடு அண்ணாசிலை அருகே வணிகவரி துறை அதிகாரிகள் வாகன சோதனையில் நேற்று அதிகாலை ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் அந்த வழியே வந்த லாரியை மறித்து ஆய்வு செய்தனர். 
ஆய்வில், ரூ.20 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள ஐந்தரை டன் ஹான்ஸ் பாக்கெட்கள், மூட்டை மூட்டையாக இருந்தது. இதனை, சென்னையில் இருந்து கோவைக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. அதனால், வணிகவரி துறை அதிகாரிகள், கோவை வணிகவரி துறை அலுவலகத்துக்கு லாரியை ஓட்டி வந்தனர். லாரி டிரைவரிடம் வணிகவரிதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கதிரவன், வணிகவரி செயலாக்க பிரிவு துணை கமிஷனர் சங்கரநாராயணன் ஆகியோர், ஹான்ஸ் புகையிலை பொருட்களை சோதனையிட்டனர். 

இதுகுறித்து, உணவுபாதுகாப்புதுறை அலுவலர் கதிரவன் கூறுகையில்,“மாதிரி சோதனைக்கு சில ஹான்ஸ் பாக்கெட்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த முடிவு 14 நாட்களில் தெரியவரும். சோதனையில், நிக்கோட்டின் நச்சு இருப்பது தெரியவந்தால், ஐந்தரை டன் ஹான்ஸ் பாக்கெட்கள் அழிக்கப்படும்” என்றார்.

No comments:

Post a Comment