Jan 4, 2014

மினி லாரியில் கடத்திய 12 லட்சம் புகையிலை பறிமுதல் டிரைவர் கைது


சென்னை, ஜன.4: 
வடசென்னை பகுதியில் நடத்திய சோதனையில், ரூ.12 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
கொத்தவால்சாவடி போலீசார், பாரிமுனை கந்தப்ப செட்டி தெருவில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட ஹன்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பண்டல், பண்டலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகளின் மதிப்பு ரூ.10 லட்சம். இதுதொடர்பாக, மினி லாரி டிரைவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பல்வீர்குமார் சிங் (25) கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 
இந்த பொருட்கள் எங்கிருந்து கடத்தி வந்தது என போலீசார் விசாரிக்கின்றனர். 
இதேபோல், சிந்தாதிரிப்பேட்டை, பாரிமுனை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் சிவசங்கரன், இளங்கோ, ராஜவேலு, சதாசிவம், சுந்தர்ராஜ் ஆகியோர் சோதனை நடத்தினர். அப்போது, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment