Dec 3, 2013

சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடுவதால் மழைக்கால நோய்கள் பரவும் அபாயம்

சேலம், டிச.3: 
சேலத்தின் பல்வேறு இடங்களிலும் சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடுவதால் மழைக்கால நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
தமிழக அளவில் கடந்த சில வாரங்களாக புயல் சின்னங்களால் அவ்வப்பொழுது மழை பெய்து வருகிறது. மழைக்காலங்களில் வைரஸ்களின் பெருக்கம் அதிகரிக்கும். இந்தக் காலகட்டத்தில் நோய் பரவலும் அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சேலம் மாவட்டத்தின் சாலையோரங்களில் டிபன் கடைகள் மற்றும் தள்ளுவண்டியில் பழங்கள் விற்பனை அதிகளவில் நடக்கிறது. 
உணவுப் பொருட்களின் விலை உயர்வு விண்ணில் பறப்பதால், சாலையோர கடைகளில் சாப்பிடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் சாலையோரக் கடைகளில் 99 சதவீதம் கடைகள், சாக்கடைக்கு மிக அருகில் செயல்படுகிறது. இங்கு சாப்பிடும் மக்கள் சுகாதாரமற்ற தண்ணீரை குடிக்கும் நிலையும் காணப்படுகிறது. 
அதே போல, சாலையோரப் பழக்கடைகளில் அன்னாசி, பப்பாளி, மாங்காய் போன்றவை திறந்த வெளியில் வைத்து விற்கப்படுகிறது. இவற்றின் மீது அதிக ஈக்கள் மொய்க்கின்றன. ஈக்கள் மற்றும் சாக்கடைக் கழிவுகள் மூலம் நோய் பரவும் அபாயம் உள்ளது. மழைக்காலத்தில் சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மருத்துவர் சசிக்குமார் கூறியதாவது: 
சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடுவது மற்றும் பழங்கள், ஜூஸ் வகைகளை குடிப்பதால் தொண்டையில் நோய்த் தொற்று உருவாகும். அஜீரணக் கோளாறுகள், புட் பாய்சன், வாந்தி, காய்ச்சல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. காய்ச்சி வடிகட்டிய தண்ணீரையே குடிக்க வேண்டும். குளிர் காலத்தில் அந்தந்த வேளைக்கு சூடான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். 
சுகாதாரமற்ற உணவுகளால் மழைக்கால நோய் பரவும் அபாயம் 
சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடுவது மற்றும் பழங்கள், ஜூஸ் வகைகளை குடிப்பதால் தொண்டையில் நோய்த் தொற்று உருவாகும். அஜீரணக் கோளாறுகள், புட் பாய்சன், வாந்தி, காய்ச்சல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. காய்ச்சி வடிகட்டிய தண்ணீரையே குடிக்க வேண்டும். குளிர் காலத்தில் அந்தந்த வேளைக்கு சூடான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். 
பிரிட்ஜில் வைத்த உணவுகளை பயன்படுத்தக் கூடாது. சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் உணவுகள் மூலம் நோய்ப்பரவலைத் தடுக்க முடியும். சாலையோரக் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு மருத்துவர் சசிக்குமார் கூறினார்.

No comments:

Post a Comment