Nov 8, 2013

தர்மபுரி நகரில் ஓட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு; தரமற்ற உணவு பொருட்கள் பறிமுதல்


நவ.8-தர்மபுரி நகரில் உள்ள ஓட்டல்கள் மற்றும் சாலையோர தள்ளு வண்டி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினார்கள்.அப்போது தரமற்ற உணவு பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
அதிகாரிகள் ஆய்வு
தர்மபுரி நகரில் உள்ள ஓட்டல்கள் மற்றும் தள்ளு வண்டி கடைகளில் சுகாதார மற்ற முறையில் உணவு பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக ஆய்வு நடத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு கலெக் டர் விவேகானந்தன் உத்தர விட்டார். இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமனஅலுவலர் டாக்டர் தினேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் கள் கோபிநாத், கந்தசாமி, குமணன் ஆகியோர் நேற்று தர்மபுரி பகுதியில் ஓட்டல் களில் திடீர் ஆய்வு நடத்தினார் கள். 
அப்போது 30-க்கும் மேற் பட்ட ஓட்டல்கள், 50-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகளில் உணவு பொருட் களின் தரம் சோதிக்கப்பட்டது. உணவு தயாரிக்கும் கூடங்கள் சுகாதாரமான முறையில் பரா மரிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட் டது. உணவு பொருட்கள் பறிமுதல்பல்வேறு ஓட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவது இந்த ஆய்வின்போது தெரிய வந்தது. உணவு தயாரிக்கும் இடங்களை சுத்தமாக பரா மரிக்க வேண்டும் என்று சம் பந்தப்பட்ட ஓட்டல்களின் உரிமையாளர்களுக்கு அறி வுறுத்தப்பட்டது.
ஓட்டல் களில் வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவுகளை சுகா தாரமான முறையில் வழங்க வும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் அதிகாரிகள் அறி வுறுத்தினார்கள்.சாலையோரங்களில் சாக்கடை கால்வாய்கள், கழிவு நீர் தேங்கும் பகுதிகளில் உணவு பொருட்களை விற் பனை செய்யும் தள்ளுவண்டி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவது தெரியவந்தது. சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட் டன.

No comments:

Post a Comment