Nov 7, 2013

கடலூரில் கார்பைடு கற்களால் பழுக்க வைக்கப்படும் வாழைப்பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்

கடலூர், நவ.7-கடலூரில் கார்பைடு கற்களைக்கொண்டு பழுக்க வைக்கப்படும் வாழைப்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கார்பைடு கற்கள்கிராமப்புறங்களில் வாழைக்காய்களை புகை போட்டு(ஊத்தம்) பழுக்க வைப்பது வழக்கம். அவ்வாறு பழுக்க வைத்த வாழைப்பழங்களை சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படாது. ஆனால் நகர்புறங்களிலோ கார்பைடு கற்களை வைத்து பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்கள் தான் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வாழைப்பழங்களை சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கிறார்கள்.
உணவு பாதுகாப்பு அதிகாரிஇது பற்றி உணவு பாதுகாப்பு அலுவலர் ஒருவர் கூறியதாவது:-
கார்பைடு கற்களைக்கொண்டு பழுக்க வைத்த வாழைப்பழங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும், இவை ஓரிரு நாட்களுக்கு மேல் தாங்காது, சீக்கிரமாக கெடத்தொடங்கி விடும். மேலும் இவற்றை சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் கார்பைடு கற்களை கொண்டு பழங்களை பழுக்க வைப்பதை அரசு தடை செய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தடையை மீறும் வியாபாரிகள் ஆனால் அரசின் தடையையும் மீறி கடலூர் முதுநகர் மற்றும் புதுநகரில் உள்ள வாழைத்தார் குடோன்களில் கார்பைடு கற்களை கொண்டு தான் வாழைக்காய்களை பழுக்க வைத்து விற்பனை செய்கிறார்கள். கடலூர்உழவர்சந்தையிலும் இந்த முறைதான் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் கூறப்படுகிறது. 
கார்பைடு கற்களுக்கு மாற்றாக பழங்களை பழுக்க வைக்க வேறு வழி உள்ளதா? என்று வேளாண்மைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-மாற்று ரசாயனம்விஞ்ஞானப்பூர்வமாக எத்திலீன் வாயு கொண்டு வாழைக்காய்களை பழுக்க வைக்கலாம். எத்திலீன் வாயுவானது எத்திரல் எனப்படும் ரசாயனத்தின் மூலம் உருவாகிறது. இந்த எத்திரல் கரைசல் கோவை போன்ற பெரு நகரங்களில் பெரிய கடைகளில் கிடைக்கிறது. இதில் வாழைக்காய்களை நனைத்து வைத்தால் சீராக பழம் பழுக்கும். அவற்றை சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படாது.இவ்வாறு அவர் கூறினார்.எனவே கார்பைடு கற்களுக்கு பதிலாக எத்திரல் வாங்கி பயன்படுத்த வியாபாரிகள் முன்வர வேண்டும். தடை செய்யப்பட்ட கார்பைடு கற்களை பயன்படுத்தும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் முன்வரவேண்டும்.

No comments:

Post a Comment