Nov 27, 2013

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் கடை உரிமம் ரத்து அதிகாரிகள் எச்சரிக்கை

செங்கல்பட்டு, நவ. 27:
மறைமலை நகர் நகராட்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், ஹன்ஸ், குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக தமிழ்நாடு உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாலசுப்பிரமணி, மணிகண்டன், வேலவன், தீபா, அமுதா ஆகியோர் மறைமலை நகராட்சிக்கு உட்பட்ட கம்பர் தெரு, பெரியார் தெரு, பாரதியார் தெரு, அண்ணா தெரு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 20க்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 20 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மறைமலை நகர் நகராட்சி பகுதியில் அதிகாரிகள் பான்பராக், குட்கா பொருட்களை கைப்பற்றினர்.

No comments:

Post a Comment