Nov 10, 2013

பதிவு செய்யாத வணிகர்களை மிரட்டக்கூடாது: உணவு பாதுகாப்பு கமிஷனர் உத்தரவு

திண்டுக்கல்: ""உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பதிவு செய்யாத வணிகர்களை, தண்டனையை கூறி, மிரட்டக் கூடாது,'' என உணவு பாதுகாப்புத் துறை கமிஷனர் குமார் ஜெயந்த் உத்தரவிட்டுள்ளார்.
உணவுப் பொருட்கள் விற்கும் தெருவோரக் கடைகள் முதல், பெரிய நிறுவனங்கள் வரை, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆண்டிற்கு ரூ.12 லட்சத்திற்குள் வருமானம் உள்ள சிறிய கடைகள் பதிவு செய்யவும், அதற்கு மேல் வருமானம் உள்ள நிறுவனங்கள் லைசன்ஸ் பெறவும் வேண்டும். பதிவு செய்ய ரூ.100 ம், லைசன்ஸ் பெற, ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை செலுத்த வேண்டும். இதற்கு, உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் நேரில் விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்தது. கடந்த ஜுலை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க, உணவு பாதுகாப்புத்துறை அனுமதித்துள்ளது. வணிகர்களிடம் ஆன்லைன் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், கடந்த 3 மாதங்களில், 5 சதவீதம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, பதிவு செய்யாத வணிகர்களை, தண்டனையை கூறி, மிரட்டக் கூடாது என, உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார் அவர் கூறியுள்ளதாவது: உணவுப் பொருட்கள் விற்கும் வணிகர்கள் பட்டியலை தயாரிக்க வேண்டும். கடைசி தேதியான 2014 பிப்., 4 க்கு முன், அனைவரும் பதிவு செய்யவும், லைசன்ஸ் பெறவும் நடவடிக்கை எடுக்கவேண்டும், என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment