Oct 8, 2013

தமிழகத்தில் 814 கேன் குடிநீர் நிறுவனங்கள் அனுமதி பெறாமல் இயங்குகின்றன பசுமை தீர்ப்பாயத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

சென்னை, அக்.8-தமிழகத்தில் பாக்கெட் மற்றும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள், தரமற்ற குடிநீரை விற்பனைசெய்வதாகவும், இதில் பல நிறுவனங்கள் முறையான உரிமங்கள் பெறவில்லை என்றும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில் சென்னையிலுள்ள தென்மாநிலங்களுக்கான தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து (சூ-மோட்டோ) வழக்கு பதிவு செய்தது.இந்த வழக்கு, பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி எம்.சொக்கலிங்கம், தொழில்நுட்ப வல்லுனர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வக்கீல் ரீட்டா சந்திரசேகர் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-தமிழகத்தில் 967 பாக்கெட் மற்றும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகிறது. இதில் 153 நிறுவனங்கள் மட்டுமே முறையான அனுமதிகளை பெற்றுள்ளது. 814 நிறுவனங்கள் அனுமதி எதுவும் பெறவில்லை. இந்த தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, 805 நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் குடிநீர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.அப்போது, நீதிபதி சொக்கலிங்கம், ‘இந்த விவகாரத்தில் அரசு எந்த விதமான சமரசமும் செய்து ª¢காள்ளக்கூடாது’ என்று கருத்து தெரிவித்தார். பின்னர், வழக்கு விசாரணையை நவம்பர் 29-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment