Sep 19, 2013

கலப்பட டீத்தூள் விற்றவர், உற்பத்தியாளர் மீது கோர்ட்டில் வழக்கு உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை

சேலம், செப்.19-தமிழகத்தில் முதல் முறையாக கலப்பட டீத்தூள் விற்றவர், உற்பத்தியாளர் மீது உணவு பாதுகாப்பு துறையினர் ஓமலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.கலப்பட டீத்தூள்சேலத்தை அடுத்த ஓமலூரை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்கள் இருவரும் அந்த பகுதியில் டீத்தூள் வியாபாரம் செய்து வந்தனர். இந்த டீத்தூளில் கலப்படம் இருப்பதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தகவல் வந்தது.இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு கலப்பட தூள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்து டீத்தூள் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்காக கொல்கத்தாவிற்கு அனுப்பினர்.கோர்ட்டில் வழக்குஇதேபோல், இந்த கலப்பட டீத்தூளை உற்பத்தி செய்த சென்னை நிறுவனத்திலும் அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் பல ஆயிரம் கிலோ கலப்பிட டீ தூளை பறிமுதல் செய்தனர். மேலும் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ததில் டீத்தூளில் கலப்படம் செய்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து உணவு பாதுகாப்பு ஆணையர் குமார் ஜெய்ந்த் கலப்பட டீத்தூளை தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளர் மீதும், விற்பனை செயத செல்வம் மற்றும் அவரது மனைவி பாக்கியலட்சுமி ஆகியோர் மீது வழக்கு தொடர உத்தரவிட்டார். அதன்படி ஓமலூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.முதன்முறையாகஇந்த வழக்கின் வருகிற 28-ந் தேதி கோர்ட்டு மூலம் சம்மன் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் செல்வம் அவரது மனைவி பாக்கியலட்சுமி மற்றும் சென்னை நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோருக்கு உணவு பாதுகாப்பு துறை மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். முதன் முதலாக உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment