Sep 2, 2013

சத்துணவுக்கு காலாவதி பாமாயில் சப்ளை உணவு பாதுகாப்பு துறையினர் அதிர்ச்சி

மேட்டூர்: சேலம் மாவட்டத்தின் சில சத்துணவு மையங்களுக்கு, காலாவதி பாமாயில் சப்ளை செய்யப்பட்டிருந்ததை, உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்தனர்.
சேலம் மாவட்டத்தில், 5,000க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மற்றும் சத்துணவு கூடங்கள் உள்ளது. உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையிலான குழுவினர், சேலம் மாவட்ட சத்துணவு கூடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சில மையங்களில் காலாவதியான பாமாயிலில் சமையல் செய்வது தெரியவந்தது.
அந்த பாமாயிலை மாற்றி, தரமான எண்ணெயில் மட்டுமே சமைக்க வேண்டும், என சத்துணைவு அமைப்பாளர்களுக்கு, உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அறிவுரை வழங்கினர்.
உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:
தயாரிப்பு தேதியில் இருந்து, மூன்று மாதத்துக்குள் பாமாயிலை உபயோகிக்க வேண்டும். ஆனால், உற்பத்தி செய்த பாமாயில், சத்துணவு மையங்களுக்கு வினியோகம் செய்வதற்கு தாமதமாகி விடுவதாக தெரிகிறது. பாமாயில் காலாவதியாகி இருப்பது ஊழியர்களுக்கே தெரியவில்லை. எனவே, காலாவதி பாமாயிலை கண்டு பிடிப்பது குறித்து ஊழியர்களுக்கு விளக்கம் அளித்துள்ளோம். ஒவ்வொரு நாளும் சமைக்கும் உணவு, சாம்பார், பொறியல் ஆகியவற்றை தனித்தனியாக சாம்பிள் எடுத்து ஒரு பாட்டில் 24 மணிநேரம் வைத்திருக்க வேண்டும், எனவும் அறிவுரை வழங்கியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment