Sep 28, 2013

ஆட்டையாம்பட்டியில் அழுகிய மாட்டு இறைச்சி 200 கிலோ பறிமுதல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

சேலம், செப்.28:
ஆட்டையாம் பட்டி ஸ்டாலின் நகரில் மக் கள் குடியிருக்கும் பகுதியில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் மாட்டு இறைச்சியை வெட்டி ஆட்டையாம்பட்டி, சீரகா பாடி உள்பட பல்வேறு பகுதி களில் உள்ள ஓட்டல் மற்றும் சில்லிசிக்கன் கடைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
குடியிருப்பு பகுதியில் மாட்டு இறைச்சி வெட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற் படுவதாக, அப்பகுதியை சே ர்ந்த சிலர் உணவு பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை, முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினர். இதையடுத்து கடந்த ஜூலை 25ம் தேதி சேலம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது சுகாதாரமற்ற முறையில் இறைச்சியை வெட்டி விற்பனை செய்ததை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர். இதையடுத்து அதிகாரிகள் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி வெட்டி விற்பனை செய்யக்கூடாது என்றும், மேலும் குடியிருப்பு பகுதியில் இறைச்சி வெட்டுதை தவிர்க்க வேண்டும் என்று வியாபாரிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.
எச்சரிக்கையை மீறி, அப்பகுதியில் தொடர்ந்து வியாபாரிகள் மாட்டு இறைச்சியை வெட்டி வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் உணவு பாதுகாப்புத்துறை சேலம் மாவட்ட நியமன அலுவலர் அனுராதா, அதிகாரிகள் சிரஞ்சீவி, இளங்கோவன், சுகாதாரத்துறை ஆய்வாளர் ஆறுமுகம் உள்பட பலர் ஸ்டாலின் நகருக்கு சென்று சோதனையிட்டனர்.
அப்போது சண்முகம் என்பவர் வீட்டில் 200 கிலோ அழுகிய மாட்டு இறைச்சி இருந்ததை கண்டுப்பிடித்து பறி முதல் செய்தனர். அப்போது அதிகாரிகள் அங்கு மாட்டு இறைச்சி வெட்டும் வியாபாரிகளிடம் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் இனி இறைச்சியை வெட்டக்கூடாது என்று, மீறி இறைச்சி வெட்டி னால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரித்துவிட்டு சென்றனர்.

No comments:

Post a Comment