Aug 22, 2013

பேருந்து நிலையம் அருகே தரமற்ற முறையில் விற்பனை செய்த சில்லிசிக்கன், மீன் வருவல் பறிமுதல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

தர்மபுரி, ஆக.22:
தர்மபுரி பேருந்து நிலையம் அருகே தரமற்ற முறையில் விற்பனை செய்த சில்லி சிக்கன், மீன்வருவல் ஆகியற்றை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி நகர பேருந்து நிலையம், புறநகர் பேருந்து நிலையத்தை சுற்றி தள்ளுவண்டியில் கூழ் கடை மற்றும் சில்லி சிக்கன், மீன் வருவல் கடைகளை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தினேஷ் மற்றும் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, சுகாதாரமற்ற நிலையில் வைத்து விற்பனை செய்த சில்லிசிக்கன், மீன் வருவல் ஆகியவற்றை உடனடியாக அப்பறப்படுத்தினர். தரமற்ற ராகி கூழை எடுத்து சாக்கடையில் கொட்டினர். சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவு பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும்.
இல்லையென்றால் பறிமுதல் செய்து அழிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு புறநகர் பேருந்து நிலையம் நுழைவாயில் இரவு டிபன் கடைகள், ஓட்டல்களை சோதனை நடத்தினர். அங்கு பயன்படுத்திய தரமற்ற தோசை மாவு, சட்னி, சாம்பார், ஆயில் அப்புறப்படுத்த உத்தரவிட் டார். மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தினேஷ் எச்சரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment